Top 10 News (08.05.2023): தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கேரள படகு விபத்து அப்டேட்..
Today Top 10 News: தமிழ்நாடு, இந்தியா, உலகம், பொழுதுபோக்கில் இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளை இந்தச் செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
தமிழ்நாடு
*தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத் தலைவராக ஆதிதிராவிடர் நலத்துறை (ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன்) அமைச்சசர் கயல்விழி நியமனமிக்கப்பட்டுள்ளார்.
*சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.45,680க்கு விற்பனை. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.5.710ஆக விற்பனை செய்யப்படுகிறது.
*600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ள திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
*பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
*தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.
இந்தியா
*கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
* ராஜஸ்தான் மாநிலம் சூரத் கர் விமானப்படை தளத்திலிருந்து வழக்கமாக பயிற்சிக்கு சென்றபோது விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 (IAF MiG 21) ரக போர் விமானம் ஹனுமந்து பார்க் அருகே பஹ்லோக் நகர் என்ற கிராமத்தில் உள்ள வீட்டின் மேல் பயங்கர சத்தத்துடன் விழுந்து வெடித்துள்ளது.
*கேரளாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
விளையாட்டு
*ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இதற்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
*சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில், முதல் இடத்தை 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் அணி இழந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்