தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: ‘ஜெ., மறைந்த நாள் நந்நாளா?’ இபிஎஸ் கோஷத்தை ட்ரெண்ட் ஆக்கும் ஓபிஎஸ் டீம்!

EPS: ‘ஜெ., மறைந்த நாள் நந்நாளா?’ இபிஎஸ் கோஷத்தை ட்ரெண்ட் ஆக்கும் ஓபிஎஸ் டீம்!

Dec 06, 2022, 08:34 AM IST

ஒருவர் இறந்தநாளை ‘நந்நாள்’ என்று யாரும் குறிப்பிடமாட்டார்கள். காரணம், அது வருத்தத்தை குறிக்கும் நாள். அப்படி ஒரு நாள் வரக்கூடாது என்பார்கள். அப்படியிருக்க, இபிஎஸ் எழுப்பிய கோஷத்தில் ஜெயலலிதா இறந்த நாளை, ‘நந்நாள்’ என்று குறிப்பிட்டதை, ஓபிஎஸ் தரப்பு ட்ரெண்ட் செய்து வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதிமுகவில் தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

இதனால், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என தனித்தனியாக அஞ்சலி செலுத்தினர்.

இது போதாதென, முன்பு பிரிந்து போன டிடிவி தினகரனின் அமமுக தனியாகவும், அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சொந்தம் கொண்டாடும் சசிகலா தனியாகவும் அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு,ஜெ.தீபாவின் கணவர் மாதவன் போன்ற கிளை உரிமை கோருவோரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அழைக்கப்படும் இபிஎஸ் தரப்பு, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு மத்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்தனர்.

அதில், ஜெயலலிதா இறந்தநாளை குறிக்கும் வாசகத்தில், ‘அம்மா மறைந்த இந்நந்நாளில்’ என்கிற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. பிறந்த நாள் அல்லது சாதனைகள் புரிந்த நாட்களுக்கு தான், ‘இந்நந்நாள்’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.

மாறாக, ஒருவர் இறந்தநாளை ‘நந்நாள்’ என்று யாரும் குறிப்பிடமாட்டார்கள். காரணம், அது வருத்தத்தை குறிக்கும் நாள். அப்படி ஒரு நாள் வரக்கூடாது என்பார்கள். அப்படியிருக்க, இபிஎஸ் எழுப்பிய கோஷத்தில் ஜெயலலிதா இறந்த நாளை, ‘நந்நாள்’ என்று குறிப்பிட்டதை, ஓபிஎஸ் தரப்பு ட்ரெண்ட் செய்து வருகிறது.

ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்த போது, பெரும்பாலும் இது மாதிரியான நிகழ்வுகளுக்கு அப்போது நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக இருந்த அழகு மருதராஜ் தான் வாசகங்களை எழுதி தருவார். தற்போது அவர் ஓபிஎஸ் அணியில் இருப்பதால், நேற்று இபிஎஸ் அணி எழுப்பிய கோஷத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மருது அழகுராஜ், ‘எல்லாம் விதி…’ என கேப்ஷன் போட்டுள்ளார்.

டாபிக்ஸ்