தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Coimbatore: A Bat Guarding A Dying Cub; Resilience In Coimbatore!

Coimbatore: இறந்தும் குட்டியை காத்த வௌவால்; கோவையில் நெகிழ்ச்சி!

Mar 12, 2023, 07:22 PM IST

தான் உயிரிழந்த நிலையிலும் குட்டியை கீழே விடாமல் இரண்டு நாளாக பாதுகாத்த தாய் வௌவாலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தான் உயிரிழந்த நிலையிலும் குட்டியை கீழே விடாமல் இரண்டு நாளாக பாதுகாத்த தாய் வௌவாலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தான் உயிரிழந்த நிலையிலும் குட்டியை கீழே விடாமல் இரண்டு நாளாக பாதுகாத்த தாய் வௌவாலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சூலூர் காவல் நிலைய வளாகத்தில் மின் கம்பியில் சிக்கி பெண் வௌவால் ஒன்று உயிரிழந்த நிலையிலும் தனது குட்டியை விடாமல் இறுக்கி பிடித்து உயிருடன் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Bachelor of Visual Arts: ’சினிமாவில் சாதிக்க ரெடியா!’ எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் அறிய வாய்ப்பு!

Nirmala Devi: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Kallakkadal: கேரள, தமிழக கடற்கரைகளில் கள்ளக்கடல் எச்சரிக்கை! கள்ளக்கடல் என்றால் என்ன்? இதோ முழு விவரம்!

Vikravandi: ’ஜூன் 1இல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலா? வேண்டவே வேண்டாம்!’ தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் எச்சரிக்கை!

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் உள்ள மரங்களில் ஏராளமான வௌவால்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வௌவால் ஒன்று தனது குட்டியுடன் இரவில் பறந்த போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்கம்பியில் சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி தாய் வவ்வால் உயிரிழந்தது ஆனால் வௌவால் உயிரிழந்த நிலையிலும் தனது குட்டியை கிழே விடாமல் பிடித்துக் கொண்டது. இந்நிலையில் உயிரிழந்த வௌவால் மின்கம்பியிலேயே தொங்கியபடி இருந்தது.

இதற்கிடையில் உயிரிழந்த நிலையில் மின் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த வவ்வாலின் இறகுகளுக்கு நடுவே குட்டி உயிரோடு இருப்பதை காவல்துறையினர் பார்த்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து வவ்வாலை மின் கம்பியில் இருந்து இறக்கி குட்டியை தாயிடமிருந்து தனியாக பிரித்தனர். பின்னர் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுதது வவ்வால் குட்டியை வனப்பகுதியில் உள்ள மற்ற வௌவால்கள் இனங்கள் இருக்கும் பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். தான் உயிரிழந்த நிலையிலும் குட்டியை கீழே விடாமல் இரண்டு நாளாக பாதுகாத்த தாய் வௌவாலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்