தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakkadal: கேரள, தமிழக கடற்கரைகளில் கள்ளக்கடல் எச்சரிக்கை! கள்ளக்கடல் என்றால் என்ன்? இதோ முழு விவரம்!

Kallakkadal: கேரள, தமிழக கடற்கரைகளில் கள்ளக்கடல் எச்சரிக்கை! கள்ளக்கடல் என்றால் என்ன்? இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil

Apr 30, 2024, 03:24 PM IST

”2012 ஆம் ஆண்டில், "கள்ளக்கடல்" என்ற சொல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) முறையான ஒப்புதலைப் பெற்றது” (PTI)
”2012 ஆம் ஆண்டில், "கள்ளக்கடல்" என்ற சொல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) முறையான ஒப்புதலைப் பெற்றது”

”2012 ஆம் ஆண்டில், "கள்ளக்கடல்" என்ற சொல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) முறையான ஒப்புதலைப் பெற்றது”

கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கையை இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டு உள்ளது. 

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் கடல் சீற்றம் அடையும் நிகழ்வை ‘கள்ளக்கடல்’ என்று கேரளாவில் குறிப்பிடப்படுகிறது. 

கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் உள்ள கடலோர குடியிருப்பாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், "கடல் கொந்தளிப்பு தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதால் கடலோர பகுதிகளில் உள்ள ஆபத்தான மண்டலங்களில் இருந்து மக்கள் விளங்கி இருக்க வேண்டும் என்று" என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) தெரிவித்து உள்ளதாக் பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கைகளை INCOIS அமைப்பு வெளியிட்டு வருகிறது. துறைமுகங்களில் மீன்பிடி கப்பல்களை பாதுகாப்பாக நங்கூரமிட மீனவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. 

"படகுகளுக்கு மோதிக்கொள்ளாதபடி பாதுகாப்பான இடைவெளியை வைத்திருப்பதன் மூலம் மோதல் அபாயத்தைத் தவிர்க்கலாம். மீன்பிடி உபகரணங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டு உள்ளது.  மேலும், கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டு உள்ளது. 

'கள்ளக்கடல்' என்ற பெயர் ஏன்?

"கள்ளக்கடல்" என்றால் "திருடனைப் போல திடீரென்று வரும் கடல்" என்று பொருள். இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் வீசும் பலத்த காற்றின் விளைவாக இந்த நிகழ்வு ஏற்படுகிறது என்று INCOIS அமைப்பு தெரிவித்து உள்ளது. இது திடீரென எந்த குறிப்பிட்ட அறிகுறிகளும் எச்சரிக்கையும் இல்லாமல் நிகழ்கிறது. 

உள்ளூர் மீனவர்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இந்த சொல், திருடன் என்று பொருள்படும் "கள்ளன்" மற்றும் கடல் ஆகிய வார்த்தைகள் ஒன்றிணைக்கப்பட்டு, "கள்ளக்கடல்" என்று உச்சரிக்கப்படுகின்றன, இது ஒரு திருடனைப் போல விரைவாகவும் எதிர்பாராத வகையிலும் அலைகள் கரையை அணுகுவதை இது குறிக்கிறது.

2012 ஆம் ஆண்டில், "கள்ளக்கடல்" என்ற சொல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) முறையான ஒப்புதலைப் பெற்றது.

- கள்ளக்கடல் நிகழ்வுகளின் போது, கடல் அலைகள் நிலத்திற்குள் விரைந்து, பரந்த பகுதிகளை மூழ்கடிக்கிறது. இந்த நிகழ்வுகள் கவனத்தை ஈர்த்தன, குறிப்பாக 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமிக்குப் பிறகு, பலர் கள்ளக்கடல் நிகழ்வை சுனாமி என்று தவறாக நினைக்கிறார்கள்.

சுனாமி மற்றும் கள்ளக்கடல் அலைகள் முற்றிலும் மாறுபட்ட காரணங்கள் அல்லது வழிமுறைகளைக் கொண்ட தனித்துவமான அலைகள் ஆகும். 

'கலக்கடல்' கணிப்பதற்கான INCOIS இன் முன்னறிவிப்பு அமைப்பு

- புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான INCOIS, இந்திய கடற்கரையில், குறிப்பாக மேற்கு கடற்கரையில் ’கள்ளக்கடல்’ நிகழ்வுகளை கணிக்க 2020 ஆம் ஆண்டில் "ஸ்வீல் சர்ஜ் ஃபோர்காஸ்ட் சிஸ்டம்" ஐ அறிமுகப்படுத்தியது.

கள்ளக்கடல் நிகழ்வுகள் உள்ளூர் காற்று அல்லது கடலோர நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாமல் திடீரென ஏற்படும் திடீர் வெள்ள நிகழ்வுகள், உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

- INCOIS விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, இந்த நிகழ்வுகள் 30° தெற்கு தெற்கு பெருங்கடலில் குறிப்பிட்ட வானிலை நிலைமைகளால் ஏற்படுகின்றன.

- தெற்கு பெருங்கடலில் உருவாகும் நீண்ட கால அலைகள் வடக்கு நோக்கி பயணித்து 3-5 நாட்களில் இந்திய கடற்கரைகளை அடைந்து, கடலோரப் பகுதிகளில் அழிவை ஏற்படுத்துகின்றன. புதிதாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு கள்ளக்கடல் நிகழ்வுகளை கணித்து, குறைந்தது 2-3 நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கைகளை வழங்குகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி