தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mi Vs Lsg: ஸ்டோனிஸின் எழுச்சியால் லக்னோ அணி அபாரம்.. மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

MI vs LSG: ஸ்டோனிஸின் எழுச்சியால் லக்னோ அணி அபாரம்.. மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

Marimuthu M HT Tamil
May 01, 2024 12:23 AM IST

MI vs LSG: லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் நடந்தபோட்டியில், லக்னோ அணி வென்றது.

Lucknow, Apr 30 (ANI): லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
Lucknow, Apr 30 (ANI): லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது (ANI )

ட்ரெண்டிங் செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 48ஆவது லீக் போட்டி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. லக்னோவில் நடந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷானும், ரோஹித் ஷர்மாவும் கலந்துகொண்டனர். இதில் இஷான் கிஷான் 32 ரன்கள் வரை எடுத்து அணியின் தொடக்கத்துக்கு நல்ல வாய்ப்பினைக் கொடுத்தார். ஆனால், அதன்பின், அடுத்த பந்தில் ரவி பிஷ்னோயின் பந்தில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய ரோஹித் சர்மா வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து மோஷின் கானின் பந்தில் அவுட்டானார்.

மூன்றாவதாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் ஆறு பந்துகள் பிடித்து, வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அப்போது ஸ்டோனிஸின் பந்தில் அவுட்டானார்.

நான்காவதாக களமிறங்கிய திலக் வர்மா ரவி பிஷ்னோயினால் ரன் அவுட் ஆக்கப்பட்டார். அவர் பெவிலியன் திரும்பும்போது 7 ரன்கள் வரை எடுத்திருந்தார்.

ஐந்தாவதாக களமிறங்கிய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா நவீன் - அல்- ஹக்கின் பந்தில் டக் அவுட் ஆனார். பின் களமிறங்கிய நேஹல் வதேரா, நிலைத்து நின்று ஆடினார். 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 2 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடக்கம்.

அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்தார் டிம் டிராவிட், அவரும் 18 பந்துகளில் 35 ரன்கள் விளாசி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும், நேஹல் வதேராவால் 46 ரன்களைத் தாண்டி எடுக்கமுடியவில்லை. அவர் மோனிஸ்கானின் பந்தில் அவுட்டானார்.

அதன்பின் வந்த பவுலரான முகமது நபி ஒரு ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்துவந்த ஜெரால்டு கோட்ஸி ஒரு ரன் எடுத்தபோது, 20 ஓவர்கள் முடிவுற்றது. மொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்தது, மும்பை இந்தியன்ஸ் அணி.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் சார்பில் மோஷின் கான் இரண்டு விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தார்.

அதன்பின்,  145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தொடக்க வீரரான அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நல்ல நிதானமான ஒரு தொடக்கத்தைத் தந்தார். அவர் 22 பந்துகள் பிடித்து 28 ரன்களை எடுத்தார். 

ஆனால், அவருக்கு இணையாக இறக்கிவிடப்பட்ட குல்கர்னி, துஷாரா பந்தால் எல்.பி.டபிள்யூ முறையில் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மூன்றாவதாக களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ், 45 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். இதில் 7பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம். இறுதியாக, முகமது நபியின் பந்தில் 62 ரன்களோடு பெவிலியன் திரும்பினார், மார்கஸ் ஸ்டோனிஸ். நான்காவதாக களமிறங்கிய தீபக் ஹோடா, 18 ரன்கள் மட்டுமே எடுத்தபோது பாண்டியாவின் பந்தில் அவுட்டானார். அதன்பின், ஐந்தாவதாக களமிறங்கிய நிக்கோலஸ் போரன், 14 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய டர்னர் 5 ரன்களிலும், படோனி 6 ரன்களில் ரன் அவுட்டும் ஆகி பெவிலியன் திரும்பினர். இறுதியாக களமிறங்கிய குர்ணால் பாண்டியா 1 ரன் எடுத்தபோது, 145 ரன்களை எட்டி, லக்னோ அணி வென்றது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு, 19.2 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

4 பந்துகள் எஞ்சியிருக்க, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி , மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது.

IPL_Entry_Point