தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆர்டர் செய்ததோ மட்டன் பிரியாணி வந்ததோ கரப்பான் பூச்சி பிரியாணி!

ஆர்டர் செய்ததோ மட்டன் பிரியாணி வந்ததோ கரப்பான் பூச்சி பிரியாணி!

Divya Sekar HT Tamil

Jul 03, 2022, 02:04 PM IST

திருவண்ணாமலை அருகே பிரபல உணவகத்தில் வழங்கப்பட்ட மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே பிரபல உணவகத்தில் வழங்கப்பட்ட மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அருகே பிரபல உணவகத்தில் வழங்கப்பட்ட மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை : ஆரணி டவுன் மணிகூண்டு அருகே தனியார் அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று மதியம் இந்த உணவகத்திற்கு நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் மட்டன் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

அவர்கள் சாப்பிடும் போது அந்த பிரியாணியில் பெரிய அளவில் கரப்பான் பூச்சு இருந்துள்ளது.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கடை ஊழியரிடம் முறையிட்டுள்ளனர். அப்போது இதனை வீடியோவாக எடுத்தவர்கள் இதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். தம்பதி உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஆரணியில் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவர் ஒருவரும், சிறுமியும் என 2 பேர் உயிரழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தால் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து சுத்தமான முறையில் அசைவ உணவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாபிக்ஸ்