தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coonoor: வெந்நீரில் விழுந்த குழந்தை பலி-மருத்துவர் இல்லை என குற்றச்சாட்டு

Coonoor: வெந்நீரில் விழுந்த குழந்தை பலி-மருத்துவர் இல்லை என குற்றச்சாட்டு

Mar 22, 2023, 08:12 AM IST

குழந்தைக்கு குளிர்பானம் கொடுத்த சிறிது நேரத்தில் திடீரென குழந்தையில் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தைக்கு குளிர்பானம் கொடுத்த சிறிது நேரத்தில் திடீரென குழந்தையில் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தைக்கு குளிர்பானம் கொடுத்த சிறிது நேரத்தில் திடீரென குழந்தையில் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தது.

குன்னூர் பகுதியில் வெந்நீரில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியமே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகனுக்கு வரும் மார்ச் 27ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வில் பங்கேற்க அவர்களது உறவினர்கள் பாலக்காட்டில் இருந்து வந்திருந்தனர். கார்த்தி காளியம்மாள் மற்றும் அவர்களது 3 வயது மகள் சரண்யா ஆகியோர் வந்திருந்த நிலையில் நேற்று இரவு ஹீட்டர் மூலம் வாளியில் தண்ணீரை சூடேற்ற வைத்து இருந்தனர். அப்போது அருகே சிறுமி சரண்யா விளையாடி கொண்டிருந்தார். எதிர்பாராத விதமான சிறுமி சரண்யா தண்ணீரில் தவறி விழுந்தது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது. உடனடியாக குழந்தையை மீட்ட உறவினர்கள் அரசு லாலி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அந்த நேரத்தில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் இல்லை என்று கூறப்படுகிறது. செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனால் நேற்று பிற்பகலில் மருத்துவமனையில் அனுமதித்த போதும் உரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை மேல்சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்ம் வர வில்லை.

இந்நிலையில் மாலை 5 மணியளவில் குழந்தைக்கு குளிர்பானம் கொடுக்க செவிலியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. குழந்தைக்கு குளிர்பானம் கொடுத்த சிறிது நேரத்தில் திடீரென குழந்தையில் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து அங்கு வந்த மருத்துவர் ஏன் குழந்தைக்கு குளிர்பானம் கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவர் மற்றும் ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாசில் தார் சிவகுமார் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின் போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தையின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குழந்தை உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை விடுத்து குழந்தையின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்