தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chance Of Moderate Rain At A Couple Of Places In The Coastal Districts Of Tamil Nadu Today

Today Weather Update : கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Divya Sekar HT Tamil

Jan 09, 2023, 08:20 AM IST

தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (AFP)
தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘அதிகரிக்கும் வெப்பம்! பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா?’ இதோ விவரம்!

Nirmala Devi Case: ’மாணவிகளை அந்த விஷயத்துக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி!’

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..தங்கம் விலை சற்று குறைவு!

EVM Machine: ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் CCTV கேமரா திடீர் பழுது.. மாவட்ட எஸ்பி சொல்வதென்ன?

இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை (ஜன.10) தொடங்கி ஜன12 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

டாபிக்ஸ்