தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Bail To Bjp Member Who Forwarded Video On North State Workers Issue

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்-வீடியோ பார்வேர்டு செய்த பாஜக பிரமுகருக்கு ஜாமின்

Manigandan K T HT Tamil

Mar 21, 2023, 01:22 PM IST

HighCourt Madurai Bench: ‘பிரசாந்த் உம்ராவ் குமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும்.’
HighCourt Madurai Bench: ‘பிரசாந்த் உம்ராவ் குமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும்.’

HighCourt Madurai Bench: ‘பிரசாந்த் உம்ராவ் குமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும்.’

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட் டெல்லி பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் குமார் முன் ஜாமின் கோரிய வழக்கில் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’ஊட்டியில் வெயில் உச்சம்! இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை!’ வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை!

Bachelor of Visual Arts: ’சினிமாவில் சாதிக்க ரெடியா!’ எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் அறிய வாய்ப்பு!

Nirmala Devi: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Kallakkadal: கேரள, தமிழக கடற்கரைகளில் கள்ளக்கடல் எச்சரிக்கை! கள்ளக்கடல் என்றால் என்ன்? இதோ முழு விவரம்!

'பிரசாந்த் உம்ராவ் குமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும்.

சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 15 நாட்கள் தினமும் கையெழுத்து இட வேண்டும்' எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த பாஜக கட்சி பிரமுகர், வழக்கறிஞர் பிரசாந்த் உம்ராவ் குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளேன். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன்.

கடந்த 3 ஆம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் ஃபார்வேர்ட் செய்தேன்.

இது தொடர்பாக தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வீடியோ நான் தயாரித்தது இல்லை. வந்த தகவலை மீண்டும் ஃபார்வேர்டு செய்தேன். இதில் எந்த உட்கருத்தும் இல்லை. நான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், நீதிபதிகள் மனுதாரரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

தமிழ்நாடு அரசு தரப்பில், மனுதாரர் இதுபோன்ற வீடியோ வெளியிட்டதால் தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டதால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது. எனவே முன்ஜாமீன் வழங்கக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பிரசாத் உம்ராவ் குமாருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது.

மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

15 நாட்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.

மனுதாரர் இதுபோன்ற வேறு ஏதும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டால் ஜாமினை ரத்து செய்து உடனடியாக காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

டாபிக்ஸ்