தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அரும்பாக்கம் வங்கி கொள்ளை - முக்கிய கொள்ளையன் முருகன் கைது!

அரும்பாக்கம் வங்கி கொள்ளை - முக்கிய கொள்ளையன் முருகன் கைது!

Divya Sekar HT Tamil

Aug 15, 2022, 12:01 PM IST

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை : அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கத்தி முனையில் வங்கி ஊழியர்களை கட்டுப் போட்டு அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து வங்கியில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 20 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த வங்கியில் பணிபுரிந்த முருகன் தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கொள்ளையடிக்கப்ட்ட நகைகள் குறித்து வாடிக்கையளர்கள் பயப்பட வேண்டாம். நகைகள் அனைத்தும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கொள்ளை போன நகைகள் கிடைக்காத பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு இன்சுரன்ஸ் பணம் கொடுக்கப்படும் வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

இந்நிலையில், வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்தில் முருகன் உட்பட ஆறு பேர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளை கும்பலைச் சேர்ந்த பாலாஜி ,சக்திவேல் ,சந்தோஷ் ஆகிய மூன்று பேர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

முக்கிய குற்றவாளி முருகனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகனை போலீசார் இன்று கைது செய்தனர்.

டாபிக்ஸ்