தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஹேப்பி நியூஸ்.. இனி அனைத்து பேருந்துகளும் தாம்பரம் வழியே கோயம்பேடு செல்லும்!

ஹேப்பி நியூஸ்.. இனி அனைத்து பேருந்துகளும் தாம்பரம் வழியே கோயம்பேடு செல்லும்!

Divya Sekar HT Tamil

Feb 17, 2023, 09:42 AM IST

google News
சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னைக்கு வரும் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் ரூட்டை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,கிண்டி, அசோக்பில்லர், வடபழனி ஏரியாக்களில் இறங்க வேண்டிய பயணிகள் நேரடியாக கோயம்பேடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த பிரச்னைக்கு தற்போது போக்குவரத்துத்துறை முடிவு கட்டியுள்ளது. அதன்படி இனி சென்னை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ”சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊர்களில் இருந்து தாம்பரம் கடந்து சென்னை வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்த செட்க்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவார்கள். அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். 

மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னை வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயில் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை, அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி