Afternoon Top 10 News: ’உதயநிதி துணை முதல்வரா? அடுத்த நெல்லை மேயர் யார்?’ மதிய நேர டாப் 10 செய்திகள் இதோ!
Aug 05, 2024, 01:32 PM IST
Afternoon Top 10 News: தமிழ்நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
Afternoon Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா?
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர பழுக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடன் ஆய்வு செய்த அவர், மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக கூறினார்.
தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்
குறித்த காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடைகளை உடனடியாக வழங்கவும், விலையில்லா வேட்டி, சேலையை பொதுமக்களுக்கு பண்டிகை காலங்களில் குறித்த நேரத்தில் வழங்கிடவும், விலையில்லா வேட்டி, சேலை மற்றும் சீருடைகள் நெய்வதற்கான வேலைகளை தமிழக நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கிடவும், இதன்மூலம் தமிழக நெசவாளர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
நெல்லை மேயர் யார்?
நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக சார்பில் கிட்டு என்கின்ற ராமகிருஷ்ணன் முன்னிருத்தப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு போட்டியாக பவுல்ராஜ் போட்டியிடுகின்றார். நெல்லை மாநகராட்சி மேயர் ஆக இருந்த சரவரணன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெறுகின்றது.
கோவை மேயர் யார்?
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக சார்பில் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். முன்னதாக மேயராக இருந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இந்த நிலையில் 29ஆவது வார்டு கவுன்சிலர் ஆக உள்ள ரங்கநாயகியை மேயர் வேட்பாளராக திமுக முன்னிருத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி ட்வீட்
2024ஆம் ஆண்டில் 36.43 பில்லியன் கனமீட்டர் எரிவாயு உற்பத்தியை இந்தியா செய்து உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார். இந்த சாதனைக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள், வளர்ந்த இந்தியாவின் உறுதியை அடைவதில் ஆற்றல் துறையில் நமது சுயசார்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் ட்வீட் செய்து உள்ளார்.
கலைஞர் நினைவுநாள் - முதலமைச்சர் அழைப்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் நெஞ்சத்தில் நிறைந்து வாழும் உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது என கூறி உள்ளார்.
சீமானுக்கு பறந்த நோட்டீஸ்
தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி எஸ்.பி. வருண் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் பகுதியில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக்
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் கோவை அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்று உள்ளது.
டாபிக்ஸ்