Wayanad: ‘வயநாடு துயரம்! நிலச்சரிவில் சரிந்த உயிர்கள்!’ அதிமுக ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Wayanad: ‘வயநாடு துயரம்! நிலச்சரிவில் சரிந்த உயிர்கள்!’ அதிமுக ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Wayanad: ‘வயநாடு துயரம்! நிலச்சரிவில் சரிந்த உயிர்கள்!’ அதிமுக ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Jul 31, 2024 08:34 PM IST

Wayanad Landslides: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

Wayanad: ‘வயநாடு துயரம்! நிலச்சரிவில் சரிந்த உயிர்கள்!’ அதிமுக ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
Wayanad: ‘வயநாடு துயரம்! நிலச்சரிவில் சரிந்த உயிர்கள்!’ அதிமுக ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

பலமான சேதங்கள் ஏற்பட்டு உள்ளன 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச் சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதேபோல், பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 

இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீட்புபணிகளை துரிதப்படுத்த வேண்டும் 

கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறும்; மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு கோடி நிதி உதவி 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.

அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். 

வயநாடு நிலச்சரிவு 

கேரள மாநிலம் வயநாட்டில் செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணி மற்றும் அதிகாலை 4.10 மணியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் இதுவரை 167க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றுவதால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உயிரிழந்த 167 பேரில் 22 பேர் குழந்தைகள் ஆவர். 96 உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், 166 பேரின் பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததாகவும் அரசு கூறி உள்ளது. மீட்கப்பட்ட 61 உடல் உறுப்புகளில், 49 உடல் உறுப்புகளின் பிரேதப் பரிசோதனை முடிந்து விட்டது. 167 உடல்களில் 75 உடல்கள் உறவினர்கள் அல்லது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் 78 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இராணுவம், கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றைக் கொண்ட மீட்புக் குழுக்கள், நிலச்சரிவுகளில் சேதமடைந்த அல்லது மண்ணால் மூடப்பட்ட வீடுகளை உடைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.