Annamalai: ’திட்டுவதுதான் அவருக்கு முழுநேர வேலை! டெபாசிட் போச்சுங்க அவருக்கு!’ நடிகர் பிரகாஷ்ராஜை விளாசிய அண்ணாமலை!
May 27, 2024, 06:05 PM IST
பெங்களூரு மத்திய தொகுதியில் நின்று டெபாசிட் இழந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ் என்பது தான் அவரது அரசியல் அனுபவம். நடிகராக பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர், நிறைய கதாபாத்திரம் செய்து உள்ளார். ஆனால் அரசியலில் அவரது அனுபவம் அவ்வளவுதான். மோடியை திட்டுவது மட்டுமே முழு நேர வேலையாக பிரகாஷ்ராஜ் செய்து கொண்டு இருக்கிறார்.
பாஜக 400 இடங்களை பிடிக்கும்
வாக்கு எண்ணிக்கைக்கு உள்ள கள நிலவரம், சூழல், வாக்கு எண்ணிக்கைக்கு கட்சியின் தயாரிப்பு குறித்து நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினோம். வரும் ஜூன் 4ஆம் தேதி மோடி மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமரும் போது தமிழ்நாட்டில் இருந்து பாஜக எம்பிக்கள் டெல்லி செல்வார்கள்.
இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ளது. மக்கள் எழுர்ச்சியை பார்க்கும் போது பாஜக தனியாக 370 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களையும் பிடிக்கும்.
தமிழ்நாட்டில் 2 இடங்களில்தான் பாஜக வெல்லும் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளதே?
தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கம் என்ற இலக்கை வைத்து உள்ளோம். நிறைய இடங்களில் கடும் போட்டி நடந்து உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய தலைவர்கள் நின்று உள்ளார்கள்.
மோடி தெய்வமகன் அல்ல, டெஸ்ட் டியூப் பேபி என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறி உள்ளாரே?
பெங்களூரு மத்திய தொகுதியில் நின்று டெபாசிட் இழந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ் என்பது தான் அவரது அரசியல் அனுபவம். நடிகராக பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர், நிறைய கதாபாத்திரம் செய்து உள்ளார். ஆனால் அரசியலில் அவரது அனுபவம் அவ்வளவுதான். மோடியை திட்டுவது மட்டுமே முழு நேர வேலையாக பிரகாஷ்ராஜ் செய்து கொண்டு இருக்கிறார்.
கேள்வி:- பிரகாஷ்ராஜ் உயிருக்கு ஆபத்து உள்ளதாக திருமாவளவன் பேசி உள்ளாரே?
திருமாவளவன் அவர்கள் பேசும்போது பொறுப்பாக பேச வேண்டும். மோடி எதிர்பை பல எல்லைகளுக்கு கொண்டு சென்றுவிட்டனர். திருமாவளவன் அவர்கள் பொறுப்போடு பேச வேண்டும். இந்தியாவிலி மோடி அவர்கள் பிரதமராக இருக்கும் வரை மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஸ்டாலின் அவர்களை போல் நாங்கள் நள்ளிரவில் யாரையும் கைது செய்யப்போவது இல்லை. கருத்துரிமையை நசுக்கும் ஸ்டாலினின் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
கேள்வி:- மாட்டிறைச்சி சமைத்து தர வேண்டும் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறி உள்ளாரே?
நான் மாட்டை சாமியாக பார்ப்பவன், மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறேன். மாட்டுக்கறி சாப்பிடுபவர்களிடம் சென்று நான் சாப்பிடாதே என்று நான் சொல்லமாட்டேன். எங்கள் அலுவலகத்திற்கு யார் வந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம். நல்லா சாப்பிட்டுவிட்டு போங்க.
மகாத்மா காந்தி அவர்கள் மாட்டிறைச்சி குறித்து என்ன எழுதி உள்ளார் என்பதை ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவர்கள் படிக்கனும். மாட்டிறைச்சி சாப்பிடாதே என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை, ஆனால் மாட்டிறைச்சியை சமைத்துக் கொண்டுங்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. மகாத்மா காந்தி சிந்தனையில் இருந்து எந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி மாறி உள்ளது என்பதற்கு ஈவிகேஸ் இளங்கோவனே சாட்சி.
கேள்வி:- ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என கூறி உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதே?
ஜெயலலிதா அவர்கள் ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. இந்துத்துவா என்பது மதம் சார்ந்தது கிடையாது; அது ஒரு வாழ்வியல் முறை. என் இந்துத்துவா அனைவரையும் அரவணைப்பதுதான். கரசேவையை ஆதரித்து ஜெயலலிதா பேசினார். ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக அதிமுக தொண்டர்களிடம் ஜெயலலிதா கையெழுத்து இயக்கம் நடத்தினார்.
கேள்வி:- நாம் தமிழரை விட பாஜக கூடுதலாக வாக்குகள் வாங்கினால் கட்சியை கலைப்பேன் என சீமான் கூறி உள்ளாரே?
விஜயலட்சுமி அக்கா பேசும்போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் அவர் என் மீது அட்டாக் செய்வார். அவர் விஜயலட்சுமி அக்காவுக்கு பதில் சொல்ல வேண்டும்.
சீமான் அண்ணனை தர்ம சங்கடத்தில் விட விரும்பவில்லை. தமிழ்நாட்டில் சீமான் அவர்களின் குரல் முக்கியமான குரல், அந்த குரல் இருக்க வேண்டும். தேவையில்லாத போட்டிக்கு ஏன் சீமான் வருகிறார் என்று எனக்கு தெரியவில்லை.
டாபிக்ஸ்