IPSTransfers : தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. இதோ விவரம்!
Jul 10, 2024, 08:32 AM IST
IPSTransfers : தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ரா கர்க் நியமனம்
வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மதுவிலக்கு அமலாக்குத்துறை கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அபின் தினேஷ் மோடக் தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் குமார்
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் குமார் அகர்வால், ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் நிர்வாக கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஐஜி அன்பு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கான பொறுப்புகளையும் கவனிக்க உள்ளார்.
சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேமானந்த சின்ஹா, தெற்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் நிர்வாக கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தென் மண்டல கண்ணன்
சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென் மண்டல கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் சென்னை வடக்கு கூடுதல் ஆணையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டுள்ளார், புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்து கொலை
தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை மாநிலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக்கொல்லப்பட்டார்.பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.