WTC Final 2023: ஸ்மித் நிதானம், ஹெட் அதிரடி - இரண்டாவது ஷெசனில் ஆஸி. ஆதிக்கம்! திணறும் இந்திய பெளலர்கள்
Jun 07, 2023, 08:53 PM IST
உணவு இடைவெளிக்கு பின்னர் தேநீர் இடைவெளி வரையிலான இடைவெளியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். மேகமூட்டம் விலகி நன்கு வெயில் அடிப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்யியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பெளலிங் செய்து வருகிறது.
முதல் நாள் உணவு இடைவெளி வரை இந்தியா, ஆஸ்திரேலியா என இரு அணிகளும் சமமாக ஆதிக்கம் செலுத்தினர். உணவு இடைவெளியின்போது ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கவாஜா, வார்னர் ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து உணவு இடைவெளிக்கு பின் ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே நிதானமாக பேட் செய்து வந்த லபுஸ்சேனை கிளீன் போல்டு ஆக்கினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. லபுஸ்சேன் 62 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் பின்னர் களத்தில் இருந்த ஸ்மித்துடன், ட்ரேவிஸ் ஹெட் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதில் ஹெட் வந்தது முதலே ஒரு நாள் போட்டி போல் அவசரமாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்திய பெளலர்கள் பந்து வீச்சை பவுண்டரிகளாக விரட்டி தள்ளினார்.
மறுபுறம் ஸ்மித் மிகவும் பொறுமையாக பேட் செய்தார். லண்டன் ஓவல் மைதானம் அவருக்கு ராசியான மைதானமாக இருந்துள்ளது. இங்கு ஸ்மித்தின் சராசரி 100 என இருந்துள்ளது.
இவர்கள் இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹெட் 60, ஸ்மித் 33 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். தேநீர் இடைவெளியின்போது ஆஸ்திரேலியா அணி 51 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் நாள் இரண்டாவது செஷனாக அமைந்திருக்கும் உணவு இடைவெளிக்கு பின் முதல் தேநீர் இடைவெளி வரை ஆஸ்திரேலியா அணி முழு ஆதிக்கம் செலுத்திள்ளது. இந்த செஷனில் 103 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்துள்ளது.
இந்த செஷனில் இந்தியா அணி ஐந்தாவது பெளலராக ஜடேஜாவை களமிறக்கியது. 7 ஓவர்கள் வீசிய அவர் 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் ஏதும் வீழ்த்தவில்லை.
இந்த செஷனில் இந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி விக்கெட்டை வீழ்த்தினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்