தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wtc Final 2023: பக்கா பிளான் பண்ணி ஆஸி., பேட்ஸ்மேன்களை தூக்கிய இந்திய பவுலர்கள் - டெயிலண்டர்கள் மட்டும் பாக்கி

WTC Final 2023: பக்கா பிளான் பண்ணி ஆஸி., பேட்ஸ்மேன்களை தூக்கிய இந்திய பவுலர்கள் - டெயிலண்டர்கள் மட்டும் பாக்கி

Jun 08, 2023, 06:02 PM IST

google News
இரண்டாவது நாளான இன்று இந்திய பவுலர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியே பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பவுன்ஸர் ஆயுதம், சரியான லைன் லென்தையும் நன்கு பயன்படுத்தினர். இதற்கு கைமேல் பலனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் செஷனில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். (ICC Twitter)
இரண்டாவது நாளான இன்று இந்திய பவுலர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியே பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பவுன்ஸர் ஆயுதம், சரியான லைன் லென்தையும் நன்கு பயன்படுத்தினர். இதற்கு கைமேல் பலனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் செஷனில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

இரண்டாவது நாளான இன்று இந்திய பவுலர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியே பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பவுன்ஸர் ஆயுதம், சரியான லைன் லென்தையும் நன்கு பயன்படுத்தினர். இதற்கு கைமேல் பலனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் செஷனில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. முதல் நாளில் முதல் செஷன் தவிர மீதமிருந்த இரண்டு செஷன்களிலும் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஸ்மித் 95, ஹெட் 146 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதைத்தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது ஆஸ்திரேலியா. ஆட்டத்தின் 3வது பந்திலேயே தனது 31வது சதத்தை பூர்த்தி செய்தார் ஸ்மித். இது இவர் இந்தியாவுக்கு எதிராக அடிக்கும் 9வது சதமாகவும் அமைந்தது.

இதேபோல் மற்றொரு பேட்ஸ்மேனான ஹெட் 150 ரன்கள் கடந்தார். இவர்கள் இருவரும் இரண்டு செஷன்களுக்கு மேல் மூன்றாவது செஷனிலும் பார்ட்னர்ஷிப்பை தொடர்ந்து வந்தனர்.

ஸ்மித் - ஹெட் ஜோடியை பிரிக்க பவுன்சர் ஆயுதத்தை இந்திய பவுலர்கள் பயன்படுத்தினர். இதன் விளைவாக கைமேல் பலன் கிடைத்து. ஹெட் விக்கெட்டை பவுன்சர் பந்து மூலம் தூக்கி திருப்புமுனை தந்தார் முகமது சிராஜ். ஹெட் 174 பந்துகளில் 163 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்த தொடங்கினார். கிரீன் 6 ரன்கள் எடுத்த நிலையில் அவரது விக்கெட்டை முகமது ஷமி தூக்கினார்.

இவரை தொடர்ந்து சிறப்பாக பேட் செய்து 268 பந்துகளில் 121 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித், ஷர்துல் தாக்கூர் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தில் இன்சைடு எட்ஜ் ஆகி போல்டானார்.

பின்னர் பேட் செய்ய வந்த ஸ்டார்க் 5 ரன்கள் எடுத்த நிலையில், மாற்று பீல்டராக களமிறங்கிய அக்‌ஷர் படேல் ரன்அவுட்டாக்கினார்.

இதனால் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா அணி இழந்தது.

தற்போது உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் எடுத்துள்ளது.

அலெக்ஸ் கேரி 22, பேட் கம்மின்ஸ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய பவுலர்களில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

இன்றும் முதல் செஷனில் ஜடேஜாவுக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் முதல் நாளை காட்டிலும் இன்று சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ், விக்கெட்டுகளை ஏதும் வீழ்த்தவில்லை.

இரண்டாவது நாள் முதல் செஷனில் இந்திய பவுலர்கள் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி