WTC Final 2023: கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் - ஏன் தெரியுமா?
Jun 07, 2023, 04:40 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தங்களது இடது கைகளில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடுகிறார்கள். அத்துடன் போட்டி தொடங்கும் முன் ஒரு நிமிடம் மெளன அஞ்சலியும் செலுத்தினார்கள்.
உலகமே ஆர்வத்துடன் எதிர்நோக்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து போட்டி தொடங்குவதற்கு முன் இரு நாடுகளின் தேசிய கீதம் பாடப்பட்டது. தேசிய கீதம் பாடுவதற்கு முன்னர் இரு அணி வீரர்களும் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரழந்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த மெளன அஞ்சலி செலுத்தினர்.
இந்த ரயில் விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து களத்தில் விளையாடும்போது இரு நாட்டு வீரர்களும் இடது கைகளின் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடுகிறார்கள்.
இன்றைய போட்டியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் விளையாடும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் பெளலிங்கை தேர்வு செய்துள்ளது. ஐசிசி தரவரிசையில் டாப் பெளலரான அஸ்வின் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரேயொரு ஸ்பின்னருடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணியில் முக்கிய பெளலரான ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக ஸ்காட் போலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா விக்கெட்டை இந்தியாவின் முகமது சிராஜ் வீழ்த்தினார். கவாஜா ரன் ஏதும் அடிக்காமல் டக்அவுட்டாகி வெளியேறினார். தற்போது ஒரு விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்