தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wtc Final 2023: இன்னும் 4 செஷன்கள், 444 ரன்கள் அடிக்க வேண்டும் - இந்தியாவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஸி.,

WTC Final 2023: இன்னும் 4 செஷன்கள், 444 ரன்கள் அடிக்க வேண்டும் - இந்தியாவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஸி.,

Jun 10, 2023, 07:46 PM IST

google News
நான்காவது நாளில் முழுமையாக இன்னும் ஒரு ஷெசன் மற்றும் 48 ஓவர்கள் மீதமிருக்க, கூடவே ஐந்தாவது நாள் முழுவதும் விளையாடிய வேண்டிய நெருக்கடியான நிலையில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு 444 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது. (AP)
நான்காவது நாளில் முழுமையாக இன்னும் ஒரு ஷெசன் மற்றும் 48 ஓவர்கள் மீதமிருக்க, கூடவே ஐந்தாவது நாள் முழுவதும் விளையாடிய வேண்டிய நெருக்கடியான நிலையில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு 444 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது.

நான்காவது நாளில் முழுமையாக இன்னும் ஒரு ஷெசன் மற்றும் 48 ஓவர்கள் மீதமிருக்க, கூடவே ஐந்தாவது நாள் முழுவதும் விளையாடிய வேண்டிய நெருக்கடியான நிலையில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு 444 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நான்காவது நாளான இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து 443 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை முத்தமிட வேண்டுமானால் இந்திய அணி 444 என்ற இமாலய இலக்கை துரத்த வேண்டும்.

இன்றைய ஆட்டத்தில் 45 ஓவர்கள் வரை மீதமிருக்க, நாளை ஒரு நாள் முழுவதும் உள்ளது. எனவே வலுவான ஆஸ்திரேலியா பவுலிங்கை எதிர்கொண்டு வெற்றி நோக்கிய ஆட்டமாக இருந்தாலும் சரி, டிரா நோக்கி விளையாடினாலும் சரி இந்தியா பேட்ஸ்மேன்களை பெறுத்தவரை நெருக்கடியான நிலையே உருவாகியுள்ளது.

முன்னதாக, மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி கூடுதலாக 147 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது.

270 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்துள்ளது. தற்போது 443 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் முதல் விக்கெட்டை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். நிதானமாக பேட் செய்து வந்த லபுஸ்சேனை ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே வெளியேற்றினார். லபுஸ்சேன் 126 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார்.

இவருக்கு அடுத்தபடியாக நன்றாக பேட் செய்து வந்த ஆல்ரவுண்டர் க்ரீனை கிளீன் போல்டு ஆக்கினார் ஜடேஜா. க்ரீன் 95 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.

இதன்பின்னர் பேட் செய்ய வந்த அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

ஸ்டார் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த கேரி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய பவுலர்களில் ஜடேஜா 3, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இன்றைய போட்டியில் ஒரு முழுமையான செஷன், நாளை ஒரு நாள் முழுவதும் இந்தியாவுக்கு மீதமுள்ள நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி