மல்யுத்த வீரர்களின் போராட்டம்: சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா திடீர் விலகல் - காரணம் என்ன?
Jun 05, 2023, 03:16 PM IST
Wrestlers protest: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்திவரும் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் விலகியுள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தீவிர போராட்டம் நடத்த வருகின்றனர்.
இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிர போராட்டத்தை முன்எடுத்தனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னோஷ் போகாட், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட் திடீரென அறிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நள்ளிரவில் சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்தில் இருந்து விலகியுள்ளார். போராட்டத்தில் இருந்து வெளியேறிய சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மீண்டும் ரயில்வே பணிக்கு திரும்பியுள்ளனர். அதேசமயம், சங்கீதா போகத் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் சந்தித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பின் போது பிரிஜ் பூஷன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
2016-ல் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பத்தக்கம் வென்றிருந்தார். 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பஜ்ரங் புனியாவும் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்