தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl 2023 Mumbai Indians Women Scored Only 109 Runs For 20 Overs

WPL 2023: மும்பை அணிக்கு என்ன ஆச்சு?-109 ரன்களில் சுருட்டிய டெல்லி கேபிட்டல்ஸ்

Manigandan K T HT Tamil

Mar 20, 2023, 09:02 PM IST

DCW vs MIW: 110 ரன்கள் எடுத்தால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெறும். (@DelhiCapitals)
DCW vs MIW: 110 ரன்கள் எடுத்தால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெறும்.

DCW vs MIW: 110 ரன்கள் எடுத்தால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெறும்.

மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் எடுத்தது.

யஸ்திகா பாட்டியா 1 ரன்னிலும், ஹேலே மாத்யூஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

பின்னர் வந்த பிரண்டும் டக் அவுட்டானார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 23 ரன்களில் நடையைக் கட்டினார். அமெலியா கெர் ரன்களிலும், பூஜா வஸ்த்ரகர் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

டெல்லி தரப்பில் மிரஸான்னே காப், ஷிகா பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஜெமிமா ஹர்மன்ப்ரீத் கேட்சை அட்டகாசமாக பிடித்து பாராட்டுகளை பெற்றார்.

இவ்வாறாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களில் சுருண்டது.

110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிட்டல்ஸ் மகளிர் விளையாடுகிறது.

தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறு நடை போட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது மும்பை.

அந்த அணியை கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் வீழ்த்தியது யு.பி.வாரியர்ஸ். தற்போது மெக் லான்னிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் கோதாவில் குதித்துள்ளது.

ஏற்கனவே டெல்லி அணியை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தற்போது அதற்கு பதிலடி கொடுக்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் தீவிர முனைப்புடன் விளையாடி வருகின்றனர்.

முன்னதாக, 3.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு.பி.வாரியர்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

டாபிக்ஸ்