தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Aus: இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?- ரிப்பீட் ஆன 20 ஆண்டு கால வரலாறு!

Ind vs Aus: இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?- ரிப்பீட் ஆன 20 ஆண்டு கால வரலாறு!

Manigandan K T HT Tamil

Jun 11, 2023, 06:01 PM IST

google News
Australia: 20 ஆண்டு கால ஃபிளாஷ்பேக் ரிப்பீட்டாகுமா என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இறுதியில் அதேபோன்று நடந்துவிட்டது. (Action Images via Reuters)
Australia: 20 ஆண்டு கால ஃபிளாஷ்பேக் ரிப்பீட்டாகுமா என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இறுதியில் அதேபோன்று நடந்துவிட்டது.

Australia: 20 ஆண்டு கால ஃபிளாஷ்பேக் ரிப்பீட்டாகுமா என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இறுதியில் அதேபோன்று நடந்துவிட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் முறையாக வென்றது. மேலும், அனைத்து ஐசிசி தொடரையும் வென்ற முதல் அணி ஆஸி., என்ற சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.

20 ஆண்டுகளுக்கு முன்னர் 2003ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதற்கு காரணமாக மேமூட்டமாக இருக்கும் சூழ்நிலையை சாதமாக்கி கொள்ள முயற்சிப்பதாக அப்போதைய கேப்டன் கங்குலி தெரிவித்து இருந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியான அதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 359 ரன்கள் குவித்தது. இந்திய பவுலர்கள் மீது ஆஸ்திரிலியா பேட்ஸ்மேன்கள் முழுமையான ஆதிக்கம் செலுத்தினர்.

இந்தியா 234 ரன்களில் சுருண்டது. ஆஸி., 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

அதேபோன்று இன்றும் நடந்துவிட்டது. ரோஹித் சர்மா, டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்ததால் ஆட்டத்தின்போக்கு மாறிவிட்டதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

தோல்வியைத் தழுவிய பிறகு பேசிய ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து கூறினார். மேலும், நாங்கள் நன்றாக செயல்பட்டோம். பேட்டிங்கில் சொதப்பியதால் தோல்வி அடைந்துவிட்டோம் என்றார்.

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி வென்றது. இந்த ஆண்டு இங்கிலாந்தின் ஓவலில் நடந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா வென்றது.

இந்தியாவுடனான பைனலில் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது ஆஸ்திரேலியா.

ஜூன் 7 அன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் விளையாடி ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 121.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்தது.

இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

அந்த இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நேற்றே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. 444 ரன்கள் இலக்காக கொண்டு விளையாடிய இந்தியா, கடைசி நாளில் போராடி தோல்வி அடைந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில், 18 ரன்களுடன் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா 43 ரன்களிலும், புஜாரா 27 ரன்களிலும் நடையைக் கட்டினர்.

புஜாரா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சொதப்பினார்.

விராட் கோலி, ரஹானே ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 78 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார் கோலி.

ஆல்-ரவுண்டர் ஜடேஜா ரன்னின்றியும், ஸ்ரீகர் பரத் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பிற வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார்.

2வது இன்னிங்ஸில் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும் சுருட்டினர்.

மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். கேப்டன் பாட் கம்மின்ஸ் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

இவ்வாறாக இந்திய அணி 2வது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இன்றைய வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சும் ஃபீல்டிங்கும் முக்கிய காரணம் ஆகும்.

அதேநேரம், இந்திய அணியின் தோல்விக் காரணமாக, டாஸ் வென்ற பிறகு எடுத்த முடிவும், பேட்டிங்கில் சொதப்பியதும் காரணமாக அமைந்துவிட்டது என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

 

 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி