தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wtc Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸி., சாம்பியன்: ரன்னர்-அப் ஆனது இந்தியா

WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸி., சாம்பியன்: ரன்னர்-அப் ஆனது இந்தியா

Manigandan K T HT Tamil

Jun 11, 2023, 05:55 PM IST

google News
Ind vs Aus: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
Ind vs Aus: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

Ind vs Aus: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் முறையாக வென்றது. மேலும், அனைத்து ஐசிசி தொடரையும் வென்ற முதல் அணி ஆஸி., என்ற சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி வென்றது. இந்த ஆண்டு இங்கிலாந்தின் ஓவலில் நடந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா வென்றது.

இந்தியாவுடனான பைனலில் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது ஆஸ்திரேலியா.

ஜூன் 7 அன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் விளையாடி ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 121.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்தது.

இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

அந்த இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நேற்றே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. 444 ரன்கள் இலக்காக கொண்டு விளையாடிய இந்தியா, கடைசி நாளில் போராடி தோல்வி அடைந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில், 18 ரன்களுடன் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா 43 ரன்களிலும், புஜாரா 27 ரன்களிலும் நடையைக் கட்டினர்.

புஜாரா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சொதப்பினார்.

விராட் கோலி, ரஹானே ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 78 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார் கோலி.

ரஹானேவும் 46 ரன்களில் நடையைக் கட்டினார்.

ஆல்-ரவுண்டர் ஜடேஜா ரன்னின்றியும், ஸ்ரீகர் பரத் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பிற வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார்.

2வது இன்னிங்ஸில் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும் சுருட்டினர்.

மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். கேப்டன் பாட் கம்மின்ஸ் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

இவ்வாறாக இந்திய அணி 2வது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இன்றைய வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சும் ஃபீல்டிங்கும் முக்கிய காரணம் ஆகும்.

 

 

 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி