தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  World Cup 2023 Schedule: இந்தியா விளையாடும் போட்டிகள் உத்தேச அட்டவணை - சென்னையில் எத்தனை போட்டி? முழு விவரம்

World cup 2023 Schedule: இந்தியா விளையாடும் போட்டிகள் உத்தேச அட்டவணை - சென்னையில் எத்தனை போட்டி? முழு விவரம்

Jun 13, 2023, 01:41 PM IST

google News
அதிகார்ப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் பிரபல கிரிக்கெட் தளம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளின் தேதி மற்றும் இடமும் தெரிவித்துள்ளது.
அதிகார்ப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் பிரபல கிரிக்கெட் தளம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளின் தேதி மற்றும் இடமும் தெரிவித்துள்ளது.

அதிகார்ப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் பிரபல கிரிக்கெட் தளம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளின் தேதி மற்றும் இடமும் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை 2023 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை முதல் முறையாக இந்தியா மட்டும் முழுமையாக நடத்தவுள்ளது. வரும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் இந்த தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இதன் அட்டவணையை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர் அட்டவணை வெளியாவதற்கு முன்பே இந்திய அணி விளையாடும் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட முக்கிய அணிகள் பங்கேற்கும் போட்டிகளின் உத்தேச அட்டவணை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் தொடர்பாக பிரபல இணையத்தளம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அட்டவணையின் விவரத்தின்படி, உலகமே ஆவலுடன் எதிர்பார்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி, அக்டோபர் 15ஆம் தேதி உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் எதிர்கொள்ளும் எனவும், இந்த போட்டியில் சென்னையில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை அட்டவணையை தயார் செய்து பிசிசிஐ, ஐசிசியுடம் கொடுத்திருப்பதாகவும், இதனை தொடரில் பங்கேற்கும் பிற அணிகளின் கிரிக்கெட் வாரியத்திடம் கொடுத்து அவர்களின் கருத்தை கேட்ட பின்னர் இறுதி அட்டவணை தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக அடுத்த வாரத்தில் உலகக் கோப்பை 50 ஓவர் தொடருக்கான அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இறுதிப்போட்டி, அரையிறுதி போட்டிக்கான மைதானங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும், இந்த போட்டிகள் முறையே நவம்பர் 15, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிகிறது.

இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெறும் தேதி, மைதானம் குறித்து பிரபல கிரிக்கெட் இணையத்தளம் வெளியிட்டுள்ள அட்டவணை விவரம் பின்வருமாறு:

தேதி போட்டி நடைபெறும் அணிகள் மைதானம்
அக்டோபர் 8இந்தியா - ஆஸ்திரேலியாசென்னை
அக்டோபர் 11இந்தியா - ஆப்கானிஸ்தான்டெல்லி
அக்டோபர் 15இந்தியா - பாகிஸ்தான் அகமதாபாத்
அக்டோபர்  19இந்தியா - வங்கதேசம்புணே
அக்டோபர் 22இந்தியா  - நியூசிலாந்துதரம்சாலா
அக்டோபர் 29இந்தியா - இங்கிலாந்துலக்னோ
நவம்பர் 2 இந்தியா - தகுதி பெறும் அணிமும்பை
நவம்பர் 5இந்தியா - தென்ஆப்பரிக்காகொல்கத்தா
நவம்பர் 11இந்தியா - தகுதி பெறும் அணிபெங்களூரு

பாகிஸ்தான் அணி ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் என ஐந்த மைதானங்களில் விளையாடும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து போட்டி அக்டோபர் 29ஆம் தேதி தரம்சாலாவிலும், இந்தியா - பாகிஸ்தான் மோதலை போன்று மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இங்கிலாந்து - ஆஸ்திரிலியா போட்டி நவம்பர் 4ஆம் தேதி அகமதாபாத்திலும், நியூசிலாந்து - தென்ஆப்பரிக்கா போட்டி நவம்பர் 1ஆம் தேதி புணே நகரில் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரையிறுதிப் போட்டிகள் மும்பை மற்றும் சென்னையிலும், இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறலாம் எனவும் தெரிகிறது.

இந்த உத்தேச அட்டவணைப்படி இந்தியா, சென்னையில் ஒரு போட்டியில் விளையாடுகிறது. அத்துடன் முக்கிய போட்டிகளாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகளும்,  ஒரு அரையிறுதி போட்டியும் சென்னையில் நடைபெற வாய்ப்பு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி