தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  West Indies: 2வது ஆட்டத்திலும் வெற்றி- Uae அணிக்கு எதிரான Odi தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி!

West Indies: 2வது ஆட்டத்திலும் வெற்றி- UAE அணிக்கு எதிரான ODI தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி!

Manigandan K T HT Tamil

Jun 07, 2023, 06:39 AM IST

google News
West Indies vs United Arab Emirates: அதிகபட்சமாக ஜஹூர் கான் 3 விக்கெட்டுகளையும் அஃப்சல் கான், சஞ்சித் சர்மா, அலி நசீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். (AFP)
West Indies vs United Arab Emirates: அதிகபட்சமாக ஜஹூர் கான் 3 விக்கெட்டுகளையும் அஃப்சல் கான், சஞ்சித் சர்மா, அலி நசீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

West Indies vs United Arab Emirates: அதிகபட்சமாக ஜஹூர் கான் 3 விக்கெட்டுகளையும் அஃப்சல் கான், சஞ்சித் சர்மா, அலி நசீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

ஷார்ஜாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்நிலையில், 2வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் ஷார்ஜாவில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 ஒரு நாள் ஆட்டங்கள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்களை குவித்தது.

பிராண்டன் கிங், ஜே.சார்லஸ் ஆகிய ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் அரை சதம் விளாசினர்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஓரளவுக்கு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவ்வாறாக அந்த அணி 306 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக ஜஹூர் கான் 3 விக்கெட்டுகளையும் அஃப்சல் கான், சஞ்சித் சர்மா, அலி நசீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை எடுத்தது.

அலி நசீர் அரை சதம் விளாசியும் பயனில்லை. அவருக்கு அடுத்தபடியாக ரித்தியா அரவிந்த் 36 ரன்களை விளாசினார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கவெம் ஹாட்ஜ், ரஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அகீம் ஜோர்டான், ஓடீன் ஸ்மித், யான்னிக் கரியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

47 பந்துகளில் 63 ரன்கள் விளாசிய ஜான்சன் சார்லஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம், ஷார்ஜாவில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூன் 4ம் தேதி நடந்த முதல் ஒரு நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி