தமிழ் செய்திகள்  /  Sports  /  Virat Kohli Among 3 Indians Named In Icc Men's T20i Team Of The Year 2022; Smriti Mandhana And 3 Others In Women's Team

ICC Team of Year: 2022இன் சிறந்த டி20 அணிகளில் இடம்பிடித்த 7 இந்தியர்கள்!

Jan 23, 2023, 09:50 PM IST

2022ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐசிசி அணியில் விராட் கோலி உள்பட மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதே போல் ஐசிசி சிறந்த பெண்கள் அணியில் நான்கு இந்திய வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐசிசி அணியில் விராட் கோலி உள்பட மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதே போல் ஐசிசி சிறந்த பெண்கள் அணியில் நான்கு இந்திய வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐசிசி அணியில் விராட் கோலி உள்பட மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதே போல் ஐசிசி சிறந்த பெண்கள் அணியில் நான்கு இந்திய வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறந்த அணி, வீரர், வீராங்கனைகள், டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டில் சிறந்த அணி ஆகியவற்றை அறிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 ஆடவர் மற்றும் பெண்கள் அணியை ஐசிசி அறிவித்துள்ளது, இதில் ஆடவர் அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.அதேபோல் பெண்கள் அணியில் ஸ்மிருத்தி மந்தனா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ரேணுகா சிங் என நான்கு பேர் இடம்பிடித்துள்ளனர்.

ஆடவர் அணியை பொறுத்தவரை இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக மூன்று வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதன்பின்னர் இங்கிலாந்து 2, பாகிஸ்தான் 2, இலங்கை, நியூசிலாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணகளில் இருந்து ஒருவர் என தலா 11 பேர் இடம்பிடித்துள்ளனர்.

பெண்கள் அணியிலும் அதிகபட்சமாக இந்திய வீராங்கனைகள் நான்கு பேர் இடம்பிடித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியா 3, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒருவர் இடம்பிடித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 போட்டிகளில் விராட் கோலி சிறப்பாகவே செயல்பட்டார். ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டி20 சதத்தை பதிவு செய்த அவர், 122 ரன்கள் எடுத்து நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் அடித்த இந்த சதம்தான், மீண்டும் கோலியை சதம் அடிக்கும் வேட்டைக்கு வித்திட்டது.

அதேபோல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் 296 ரன்கள் குவித்த கோலி, நான்கு அரை சதங்களை விளாசினார். 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோனி அடித்த சிக்ஸ் எப்படியோ, அதேபோல் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேக்புட்டில் கோலி அடித்த சிக்ஸ் மிகவும் பிரபலமானது. அந்தப் போட்டியில் நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி ஒற்றை ஆளாக 82 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற்ற செய்தார்.

இதேபோல் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டா ஆகியோர் இணைந்து கடந்த ஆண்டில் 1164 ரன்கள் டி20 போட்டிகளில் குவித்துள்ளனர். இதில் 2 சதம் மற்றும் 9 அரை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்ட்யா 607 ரன்கள் கடந்த ஓராண்டில் குவித்ததோடு, 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்தார்.

பெண்கள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இளம் அதிரடி வீராங்கனையான ஸ்மிருத்தி மந்தனாவுக்கு சிறப்பான ஆண்டாக 2022 அமைந்தது. 21 இன்னிங்ஸில் 594 ரன்கள் குவித்த அவர், 5 அரை சதங்களை விளாசியுள்ளார். சிறப்பாக பந்து வீச்சில் ஈடுபட்ட தீப்தி ஷர்மா சிக்கனமான ரன்ரேட்டுடன் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ள இவர் 370 ரன்கள் அடித்துள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்டரான ரிச்சா கோஷ் 18 போட்டிகளில் 259 ரன்கள் விளாசியுள்ளார். அதேபோல் ரேணுகா சிங் 22 விக்கெட்டுகளை வீழ்ததி ஐசிசியின் பெருமைமிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளார்.

ஐசிசி சிறந்த டி20 ஆடவர் அணி :

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்) - இங்கிலாந்து

முகமது ரிஸ்வான் - பாகிஸ்தான்

விராட் கோலி - இந்தியா

சூர்யகுமார் யாதவ் - இந்தியா

க்ளென் பிலிப்ஸ் - நியூசிலாந்து

சிக்கந்தர் ராசா - ஜிம்பாப்வே

ஹர்திக் பாண்ட்யா - இந்தியா

சாம் கரன் - இங்கிலாந்து

வனிந்து ஹசரங்கா -இலங்கை

ஹாரிஸ் ராப் - பாகிஸ்தான்

ஜோசுவா லிட்டில் - அயர்லாந்து

ஐசிசி சிறந்த டி20 பெண்கள் அணி:

ஸ்மிருதி மந்தனா - இந்தியா

பெத் மூனி - ஆஸ்திரேலியா

ஷோபி டெவின் (கேப்டன்) - நியூசிலாந்து

ஆஷ் கார்ட்னெர் - ஆஸ்திரேலியா

தஹிலா மெக்ராத் - ஆஸ்திரேலியா

நிடா தர் - பாகிஸ்தான்

தீப்தி ஷர்மா - இந்தியா

ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்) - இந்தியா

சோபி எக்லெஸ்டோன் - இங்கிலாந்து

இனோகா ரணவீரா - இலங்கை

ரேணுகா சிங் - இந்தியா

 

 

டாபிக்ஸ்