தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tennis Player Mahesh Boopathy : இரட்டையர் டென்னிஸின் இணையற்ற வீரர் மகேஷ் பூபதி பிறந்த தினம் இன்று!

Tennis Player Mahesh Boopathy : இரட்டையர் டென்னிஸின் இணையற்ற வீரர் மகேஷ் பூபதி பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil

Jun 07, 2023, 07:00 AM IST

google News
Mahesh Boopathy : மகேஷ் பூபதி குளோப் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை 2002ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, பூபதி டென்னிஸ் அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார். ஸ்போர்ட்ஸ்365 உள்ளிட்ட டென்னிஸ்க்கு தேவையான பொருட்களை விற்கும் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

90களில் டென்னிஸில் கலக்கிய லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடியில் ஒருவரான மகேஷ் பூபதி முன்னாள் டென்னிஸ் நட்சத்திர ஆட்டக்காரார். லியண்டர் பயஸ் - மகேஷ் பூபதி இந்திய விளையாட்டுத் துறையால் மறக்க முடியாத பெயர்கள். இவர்கள் இணை புகழ்பெற துவங்கியவுடன்தான், டென்னிஸ் மீதான கவனம் இந்தியர்களுக்கு ஏற்பட்டது. 

ஒரு காலத்தில் கிரிக்கெட்டை மட்டும் ரசித்து வந்து இந்திய வீரர்கள் மற்ற விளையாட்டுகளையும் ரசிக்கத் துவங்கியது, இந்த விளையாட்டில் இந்த ஜோடியின் வருகையால்தான். அதில் மகேஷ் பூபதி பிறந்த தினம் இன்று. அவர் குறித்து சில தகவல்கள்.

மகேஷ் சீனிவாஸ் பூபதி. 1974ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி பிறந்தார். முன்னாள் தொழில்முறை டென்னிஸ் வீரர். இவர் சென்னையில் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில் முறையில் விளையாடினார். தற்போது இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.

2009ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். 2012ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.

2001ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மகேஷ் பூபதி குளோப் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை 2002ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, பூபதி டென்னிஸ் அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி கழகம் இந்தியாவில் 9 மாநிலங்கள் உள்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களிலும் உள்ளது. ஸ்போர்ட்ஸ் 365 உள்ளிட்ட டென்னிஸ்க்கு தேவையான பொருட்களை விற்கும் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். 

அதன்மூலம் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார். இதனால் இந்தியர்கள் தரமான விளையாட்டு வீரர்களாக உருவாக முடியும். 

இவர் புகழ்பெற்ற திரைப்பட நடிகை லாரா தத்தாவை 2011ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாய்ரா என்ற பெண் குழந்தை உள்ளார். மகேஷ் பூபதி வாழ்வில் எல்லா நலன்களும், வளமும் பெற்று வாழ அவரது பிறந்த நாளில் ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது. 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி