தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl Record: டிஎன்பிஎல் முதல் சீசனில் அதிக சிக்ஸர் விளாசிய டாப் 5 பிளேயர்ஸ்

TNPL Record: டிஎன்பிஎல் முதல் சீசனில் அதிக சிக்ஸர் விளாசிய டாப் 5 பிளேயர்ஸ்

Manigandan K T HT Tamil

Jun 15, 2023, 04:45 AM IST

google News
TNPL 2016: TUTI பேட்ரியாட்ஸ் அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், 2016 சீசனில் மொத்தம் 3 ஆட்டங்களில் விளையாடி 170 ரன்களை குவித்தார்.
TNPL 2016: TUTI பேட்ரியாட்ஸ் அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், 2016 சீசனில் மொத்தம் 3 ஆட்டங்களில் விளையாடி 170 ரன்களை குவித்தார்.

TNPL 2016: TUTI பேட்ரியாட்ஸ் அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், 2016 சீசனில் மொத்தம் 3 ஆட்டங்களில் விளையாடி 170 ரன்களை குவித்தார்.

முதல் டிஎன்பிஎல் சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பார்ப்போம்.

முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் பாபா அபராஜித் 5 ஆட்டங்களில் விளையாடி, 293 ரன்களை விளாசினார். முதல் சீசனில் சதம் விளாசிய ஒரே வீரரும் பாபா அபராஜித் தான். அந்த சீசனில் இவரது அதிகபட்சம் 118 நாட் அவுட்.

ஆவரேஜ் 97.67. மொத்தம் 167 பந்துகளை எதிர்கொண்ட அவரது ஸ்டிரைக் ரேட் 175.44. 2 அரை சதம் விளாசிய அவர், 25 ஃபோர்ஸ், 16 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

தினேஷ் கார்த்திக்

TUTI பேட்ரியாட்ஸ் அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், 2016 சீசனில் மொத்தம் 3 ஆட்டங்களில் விளையாடி 170 ரன்களை குவித்தார். இவரது அதிகபட்சம் 67*. ஆவரேஜ் 85. இவர் மொத்தம் 106 பந்துகளை எதிர்கொண்டு 9 ஃபோர்ஸ், 12 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இவரது ஸ்டிரைக் ரேட் 160.37.

கவுசிக் காந்தி

TUTI பேட்ரியாட்ஸ் அணியில் விளையாடிய மற்றொரு பிளேயர் கவுசிங் காந்தி, 9 ஆட்டங்களில் ஆடி, 366 ரன்களை குவித்தார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 86. 260 பந்துகளை எதிர்கொண்ட இவர், 3 அரை சதங்களை விளாசினார். மொத்தம் 39 ஃபோர்ஸ், 12 சிக்ஸர்களை அடித்தார்.

சதீஷ் ஆர்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விளையாடிய சதீஷ், 9 ஆட்டங்களில் விளையாடி139 ரன்களை குவித்தார். இவரது அதிகபட்சம் 57*. 81 பந்துகளை எதிர்கொண்ட அவர், 1 அரை சதம் பதிவு செய்தார். மொத்தம் 5 ஃபோர்ஸ், 12 சிக்ஸர்களை பதிவு செய்தார்.

வசந்த் சரவணன் எஸ்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம்பிடித்திருந்த வசந்த் சரவணன், 9 ஆட்டங்களில் விளையாடி, 268 ரன்களை 2016 இல் குவித்தார். இவரது அதிகபட்சம் 54. மொத்தம் 225 பந்துகளை எதிர்கொண்ட இவர், 18 ஃபோர்ஸ், 12 சிக்ஸர்களை பதிவு செய்தார். மொத்தம் 3 அரை சதங்களை பதிவு செய்தார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும்.

இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும். 7வது சீசன் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதுவரை லைக்கா கோவை கிங்ஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி