TNPL: ”பூம் பூம் பூமர் சிக்சஸ்” விருதை தட்டிச் சென்ற கோவை வீரர்!
Jun 13, 2023, 12:09 AM IST
Lyca Kovai Kings: ”விப்ரோ சில் வீரருக்கான விருதை ” விஜய் ஷங்கர் வென்றார்
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லைகா கோவை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வீரர்கள் வென்ற விருதுகள் விவரம்
1. "ஸ்ரீராம் மேக்சிமம் ஃபோர்ஸ்" விருதை” சாய் சுதர்ஷன் வென்றார்.
2.”பூம் பூம் பூமர் சிக்சஸ்” விருதை ” சாய் சுதர்ஷன் வென்றார்
3.”விப்ரோ சில் வீரருக்கான விருதை ” விஜய் ஷங்கர் வென்றார்
4.”சொனாட்டா ஸ்டைலிஷ் வீரருக்கான விருதை ” மொஹம்மது. எம் வென்றார்
5.”சிட்ரோன் சி3 டர்போ பெர்ஃபார்மருக்கான விருதை” ஷாரூக் கான் வென்றார்
6.”ஷேரான்ப்ளய் பவர்ஃபுல் கேட்ச்சிற்கான விருதை “ ஜெ. சுரேஷ் குமார் வென்றார்
7.”ஸ்ரீராம் ஃபெண்டாஸ்டிக் 50க்கான விருதை” சாய் சுதர்ஷன் வென்றார்
8.”ஸ்ரீராம் கேபிட்டல் ஆட்டநாயகன் விருதை” சாய் சுதர்ஷன் வென்றார்
தோல்விக்குப்பின் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் சாய் கிஷோர் பேசுகையில், “மிடில் ஓவர்களில் எங்கள் பெளலர்கள் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்துவிட்டோம். அதே சமயம் சாய் சுதர்ஷன் பிரமாதமாக விளையாடி ஆட்டத்தை அவர் பக்கம் கொண்டு சென்றுவிட்டார். எங்களிடம் 5-6 முதல் தர போட்டிகளில் விலையடிய வீரர்கள் இருப்பதால் இந்த தோல்வியிலிருந்து மீண்டு அடுத்தப்போட்டிக்கு நாங்கள் தயாராவோம்” என்று சாய் கிஷோர் தெரிவித்தார்.
வெற்றிக்குப்பின் லைகா கோவை கிங்ஸ் கேப்டன் ஷாரூக் கான் பேசுகையில், “ சென்ற ஆண்டு விளையாடிய பல வீரர்கள் அணியிலிருப்பது கூடுதல் பலம். அதோடு பேட்டிங்கில் சாய், நான் மற்றும் முகிலேஷ் ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப்பால் சிறப்பான ஸ்கோரை எட்ட முடிந்தது. கடந்த வருடம் சிறப்பாக பெளலிங் செய்தது போல் இம்முறையும் அதை தொடர முயற்சிக்கிறேன்.” என்று ஷாரூக் கான் பேசினார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கோவை அணி 179 ரன்களை குவித்துள்ளது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் விளையாடியது.
அந்த அணியின் துஷார் ரஹேஜா மட்டுமே 33 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர், 2 ரன்களில் நடையைக் கட்டினார்.
அவரது விக்கெட்டை முகமது வீழ்த்தினார். கேப்டன் ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இவ்வாறாக 8 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 79 ரன்களில் திணறியது.
பின்னர் புவனேஸ்வரனும், மணிகண்டனும் நின்று விளையாடினர். ஆனாலும் பெரிய ஸ்கோர் எதுவும் பதிவு செய்யவில்லை.
20 ஓவர்களில் திருப்பூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களில் சுருண்டது திருப்பூர். இவ்வாறாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லைகா கோவை கிங்ஸ் அணி.
டாபிக்ஸ்