தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl 2023: ஒரு பந்தில் 2 அணிகளும் ரிவியூ - மூன்றாவது அம்பயர் முடிவுக்கு ரிவியூ கேட்ட அஸ்வின்! டிஎன்பிஎல் சுவராஸ்யம்

TNPL 2023: ஒரு பந்தில் 2 அணிகளும் ரிவியூ - மூன்றாவது அம்பயர் முடிவுக்கு ரிவியூ கேட்ட அஸ்வின்! டிஎன்பிஎல் சுவராஸ்யம்

Jun 15, 2023, 04:24 PM IST

google News
பால்சி திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் 3வது அம்பயர் முடிவுக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரிவியூ கேட்ட சுவாரஸ்ய சம்பவம் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்துள்ளது. அம்பயர் ரிவியூக்கு எதிராக ரிவியூ கேட்டது பற்றி ஆட்டம் முடிந்த பிறகு அஸ்வின் டெக்னிக்கலாக விளக்கியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் மன்கெட் அவுட், ரிட்டயர்ட் அவுட் போன்ற விதிமுறைகளை வைத்து எதிரணிக்கு எதிராக விளையாட்டு காட்டுவதில் வல்லவர் என பெயரெடுத்த இந்திய பவுலிங் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின், மூன்றாவது நடுவரின் முடிவுக்கு எதிராக ரிவியூ கேட்டு திகைப்பு அடையச்செய்துள்ளார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 4வது போட்டி பால்சி திருச்சி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக கோவையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த திருச்சி அணி 120 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து பேட் செய்த திண்டுக்கல் அணி 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 13வது ஓவரின் கடைசி பந்தை அஸ்வின் வீச, பவுண்டரி அடிக்க முயன்ற திருச்சி பேட்ஸ்மேன் ராஜ்குமார் விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித்திடம் பிடிபட்டார். அம்பயர் அவுட் கொடுத்த நிலையில் பேட்ஸ்மேன் ராஜ்குமார் ரிவியூ செய்தார்.

இதில் பேட் தரையில் பட்டதால் அல்ட்ர் எட்ஜி ஸ்பைக் தோன்றியது எனவும், பந்து பேட்டில் படவில்லை எனவும் கூறி அம்பயர் நாட்அவுட் என தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின், மூன்றாவது அம்பயரின் முடிவுக்கு எதிராக ரிவியூ செய்தார். ஒரே பந்தில் இரு அணிகளும் ரவியூ செய்தனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு அம்பயர் பொருமையாக பார்த்து தனது முடிவில் மாற்றம் செய்யாமல் நாட்அவுட் என்றே தெரிவித்தார். இதையடுத்து மூன்றாவது அம்பயரின் முடிவுக்கே அஸ்வின் ரிவியூ கேட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் விடியோவும் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். சிறப்பாக பவுலிங் செய்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டி முடிந்த பின்னர் மூன்றாவது நபர் முடிவுக்கு ரிவியூ கேட்டதற்கான காரணத்தை டெக்கினிக்கலாக விளக்கினார் அஸ்வின். இதுகுறித்து அவர் கூறியதாவது: " பெரிய திரையில் பார்க்கும்போது அவுட் என்ற தோன்றியது. டிஎன்பிஎல் தொடருக்கு டிஆர்எஸ் விதிமுறை புதிதாக உள்ளது. அல்ட்ரா எட்ஜில் தோன்றும் ஸ்பைக், எட்ஜாக இருந்தாலும் பேட்டுக்கு முன்னால் தோன்றும். ஆன் ஃபில்டு முடிவை மாற்ற உறுதியான ஆதரங்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முடிவை மாற்றியது மகிழ்ச்சிகரமாக இல்லை. எனவே ரிவியூ கேட்டனே. ஏனென்றால் அம்பயர் வேறு கோணத்தில் இருந்தும் பார்க்கலாம் என கருதினேன்" என்றார்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி