TNPL 2023: WTC Final மிஸ் ஆச்சு! டிஎன்பிஎல் தொடரில் களமிறங்கும் அஸ்வின் - எந்த அணிக்காக தெரியுமா?
Jun 13, 2023, 04:47 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாமல் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வின் கழட்டிவிடப்பட்ட நிலையில், தற்போது அவர் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டாப் அணியில் களமிறங்குகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அணியில் இடம்பிடித்திருந்தபோதிலும், ஆட்டத்தின் சூழ்நிலை காரணமாக ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை இந்திய அணியின் ஸ்பின் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 பவுலராக இருந்தபோதிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அஸ்வினை இந்திய அணியில் சேர்க்காததற்கு இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாமல், பிற நாடுகளை சேர்ந்த வீரர்களும் தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர். அவர் அணியில் இடம்பிடித்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருத்துகளை முன் வைத்தனர்.
இந்திய அணி வீரர்கள் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், அடுத்ததாக ஜூலை மாதம் நடைபெற இருக்கும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளனர். இந்த தொடருக்கான அணியில் அஸ்வின் இடம்பிடிப்பார் என தெரிகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் தற்போது தொடங்கியிருக்கும் டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட உள்ளார். இதை அஸ்வின் தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலமாக உறுதிபடுத்தியுள்ளார்.
2016 முதல் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடி வருகிறார் அஸ்வின். இந்த அணி 2018, 2019 சீசனில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது. கடந்த 2022 சீசனில் வெறும் 2 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்தது.
ஏற்கனவே திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் வரும் சக்கரவர்த்தி இடம்பிடித்துள்ள நிலையில், தற்போது அஸ்வினும் அணியில் தன்னை இணைத்துகொள்ள உள்ளார். இதனால் திண்டுக்கல் அணி வலுவான ஸ்பின் அட்டாக்கை கொண்ட அணியாக உருவெடுக்கவுள்ளது.
இந்த சீசனில் திண்டுக்கல் அணி தனது முதல் போட்டியில் பால்சி திருச்சி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 14ஆம் தேதி கோவை என்என்ஆர் கல்லூர் மைதாத்தில் நடைபெறுகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து, அந்த அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று 14 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து தனது பவுலிங் பார்மை டிஎன்பிஎல் தொடரிலும் தொடர்ந்து பேட்ஸ்மேன்களை மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி: ஆதித்யா கணேஷ் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி,பாபா இந்திரஜித், சுபோத் பாட்டி, அத்வைத் ஷர்மா, விமல் குமார், விக்னேஷ், தமிழ் தீபன், அபாஃன் காதர், அருண், ரோஹன் புத்ரா, விபி தீரன், ஹேமந்த் குமார், கிஷோர், பூபதி குமார், சரவண குமார், சரத் குமார்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்