தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl 2023: இந்த சீசனின் முதல் சதம் - கோவை பவுலர்களை பந்தாடிய அஜித்தேஷ்! நெல்லைக்கு இரண்டாவது வெற்றி

TNPL 2023: இந்த சீசனின் முதல் சதம் - கோவை பவுலர்களை பந்தாடிய அஜித்தேஷ்! நெல்லைக்கு இரண்டாவது வெற்றி

Jun 16, 2023, 11:46 PM IST

google News
முதல் இன்னிங்ஸில் லைக்கா கோவை கிங்ஸ் டாப் ஆர்ட்ர் பேட்ஸ்மேன் சாய் சுதர்சனின் அதிரடிக்கு சற்றும் சளைக்காத விதமாக பதிலடி கொடுத்துள்ளார் நெல்லை ராயல் கிங்ஸ் பேட்ஸ்மேன் குருசாமி அஜிதேஷ். இந்த சீசனின் முதல் சதத்தையும் அடித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் லைக்கா கோவை கிங்ஸ் டாப் ஆர்ட்ர் பேட்ஸ்மேன் சாய் சுதர்சனின் அதிரடிக்கு சற்றும் சளைக்காத விதமாக பதிலடி கொடுத்துள்ளார் நெல்லை ராயல் கிங்ஸ் பேட்ஸ்மேன் குருசாமி அஜிதேஷ். இந்த சீசனின் முதல் சதத்தையும் அடித்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் லைக்கா கோவை கிங்ஸ் டாப் ஆர்ட்ர் பேட்ஸ்மேன் சாய் சுதர்சனின் அதிரடிக்கு சற்றும் சளைக்காத விதமாக பதிலடி கொடுத்துள்ளார் நெல்லை ராயல் கிங்ஸ் பேட்ஸ்மேன் குருசாமி அஜிதேஷ். இந்த சீசனின் முதல் சதத்தையும் அடித்துள்ளார்.

டிஎன்பிஎல் 2023 தொடரின் 6வது போட்டி லைக்கா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கோவையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த கோவை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் தனது வழக்கமான பாணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 52 பந்துகளுக்கு 90 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சுரேஷ் குமார் 33 ரன்கள் எடுத்தார்.

20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு கோவை அணி 181 ரன்கள் எடுத்தது. நெல்லை பவுலர்களில் ஆல்ரவுண்டர் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதைத்தொடர்ந்து சற்று கடினமான இந்த இலக்கை சேஸ் செய்ய களமிறங்கியது நெல்லை அணி.

இம்பேக்ட் வீரர் நிரஞ்சன் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனான நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்தில் முதல் பந்திலேயே டக்அவுட்டாகி வெளியேறினார்.

பின் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய குருசாமி அஜிதேஷ் தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்து ரன்களை குவித்தார்.

நிதானமாக பேட் செய்து ரன்கள் எடுத்து வந்த நிரஞ்சன் 25 ரன்களில் அவுட்டானார். இதன் பின்னர் வந்த ஈஸ்வரன் 3, சோனு யாதவ் 20 ரன்களில் அவுட்டானார்கள்.

இதற்கிடையே அரைசதத்தை பூர்த்தி செய்த அஜித்தேஷ் தொடர்ந்து அதிரடியாக பேட் செய்து ரன்களை குவித்து வந்தார். ஆட்டத்தின் 19வது ஓவரில் 100 ரன்களை கடந்து இந்த சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார்.

இதையடுத்து கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் 2வது பந்தில் சிக்ஸரை பறக்கவிட்ட அஜிதேஷ் 4வது பந்தில் 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.

கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பேட் செய்ய வந்த பொய்யாமொழி ஒரு சிக்ஸர், ஒரு ரன் எடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பு 182 ரன்கள் எடுத்த நெல்லை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டிஎன்பிஎல் 2023 சீசனில் விளையாடிய 2 போட்டிகளிலும் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

நாளை எந்த போட்டிகளும் நடைபெறாத நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு போட்டிகள் நடக்கவுள்ளன.

மாலை 3.15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் - பால்சி திருச்சி அணியும், 7.15 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சியாச்செம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த சீசனில் கோவையில் இன்றுடன் கடைசி போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி