தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  The Ashes 2023: முதல் இன்னிங்ஸில் ஆஸி., 386-க்கு ஆல்-அவுட்: 2வது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து

The Ashes 2023: முதல் இன்னிங்ஸில் ஆஸி., 386-க்கு ஆல்-அவுட்: 2வது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து

Manigandan K T HT Tamil

Jun 18, 2023, 07:16 PM IST

google News
England vs Australia: இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. (AFP)
England vs Australia: இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

England vs Australia: இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, கடந்த 16ம் தேதி தொடங்கிய போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அந்த அணியின் ஜோ ரூட் சதம் விளாசி அசத்தினார். ஜாக் கிராலி, பேர்ஸ்டோ அரை சதம் விளாசி அசத்தினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் குவித்தது.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து இருந்தது. கவாஜா 126, கேரி 52 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கவாஜா அசத்தலாக விளையாடி சதம் விளாசினார். டிராவிஸ் ஹெட் அரை சதமும், அலெக்ஸ் கேரி அரை சதமும் விளாசினர்.

இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் வார்னர் 9 ரன்களில் சொதப்ப, கவாஜா நின்று விளையாடினார். லபுஸ்சேன் டக் ஆவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஸ்டீவ் ஸ்மித்தும் பெரிதும் சோபிக்கவில்லை.

டிராவிஸ் ஹெட் அரை சதமும், அலெக் கேரி 66 ரன்களும் விளாசினர். கேப்டன் கம்மின்ஸ் 38 ரன்கள் எடுத்தார். கிரீன் 38 ரன்கள் அடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி