Sachin Tendulkar: WTC ஃபைனலில் இந்த 2 வீரர்களையும் இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்-சச்சின் டெண்டுல்கர் யோசனை
Jun 07, 2023, 12:19 PM IST
Sachin Tendulkar: சில நேரங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் பவுன்ஸை அதிகம் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்திய அணிக்கு ஓவல் மைதானம் சிறப்பானதாக இருக்கும் என்றார் சச்சின் டெண்டுல்கர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஜடேஜாவும், அஸ்வினும் அற்புதங்களை நிகழ்த்துவார்கள் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இன்று (ஜூன் 7) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து இந்த முறை ஃபைனலுக்கு முன்னேறவில்லை. ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இந்த முறை ஃபைனலில் மோதுகிறது.
ஐபிஎல் திருவிழா முடிந்த பிறகு, மிகப் பெரிய விளையாட்டாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கருதப்படுகிறது. இந்தப் போட்டியின் பைனல் இன்று தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரையும் அணி போட்டியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சச்சின் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஓவல் மைதானத்தில் விளையாடுவதால் இந்திய அணி மகிழ்ச்சி அடையும். போட்டி நடக்கும்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் வகையில் ஓவல் ஆடுகளத்தின் தன்மை உள்ளது. எனவே, சுழற்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
சில நேரங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் பவுன்ஸை அதிகம் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்திய அணிக்கு ஓவல் மைதானம் சிறப்பானதாக இருக்கும் என்றார் சச்சின் டெண்டுல்கர்.
இந்தப் போட்டியில் ஜெயிக்கும் அணிக்கு ரூ.13 1/4 கோடியும், 2வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.6 1/2 கோடி கிடைக்கும்.
புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ.3 3/4 கோடி பரிசுத்தொகையாக அளிக்கப்படவுள்ளது.
4வது இடத்தைப் பெற்ற அணிக்கு ரூ.2 3/4 கோடியும், 5வது இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ.1 1/2 கோடியும் வழங்கப்படவுள்ளது.
இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஃபைனல் போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட் நேரலையில் இப்போட்டியை ஒளிபரப்புகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் அனல் பரக்கும் என எதிர்பார்க்கலாம். 140 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூன் மாதத்தில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் போட்டிக்காக இந்திய அணியினர் கடந்த ஒரு வார காலமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸி., வீரர்களும் பயிற்சியில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
டெஸ்ட் டீமை பொருத்தவரை இந்திய அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2வது இடத்தில் இருக்கிறது.
டாபிக்ஸ்