தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl: இன்று முதல் டிஎன்பிஎல் திருவிழா!-பரிசுத் தொகை, இதுவரை சாம்பியன்கள் விவரம் உள்ளே..

TNPL: இன்று முதல் டிஎன்பிஎல் திருவிழா!-பரிசுத் தொகை, இதுவரை சாம்பியன்கள் விவரம் உள்ளே..

Manigandan K T HT Tamil

Jun 14, 2023, 05:04 PM IST

google News
Tamilandu Premier Leauge: இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. (TNPL)
Tamilandu Premier Leauge: இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Tamilandu Premier Leauge: இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும்.

2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.

இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்று முதல் 7வது சீசன் போட்டி தொடங்குகிறது.

யார் யார் விளையாட முடியும்?

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குரூப் பெற்றுள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம். நமது தமிழக வீரர்களுக்கு ஆதரவு தரலாம்.

Fancode செயலியிலும் இந்தத் தொடரை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். கடந்த முறை மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இந்த முறை இன்று முதல் தொடங்கி ஒரு மாத காலம் நடக்கவுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி வரை இப்போட்டி நடக்கவுள்ளது.

மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி, நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

சீசன் 7இல் பங்கேற்கும் 8 அணிகள்

கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கல் ஆகிய நகரங்களில் மட்டுமே இந்த முறை போட்டிகள் நடைபெறவுள்ளன.

மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

லீக் ஆட்டங்கள் ஜூலை 5ம் தேதி நிறைவு பெறும். புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், குவாலிஃபயர் 1 சுற்றுக்கு முன்னேறும். அதில் ஜெயிக்கும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும்.

தோற்கும் அணி குவாலிஃபையர் 2 சுற்றில் எலிமினேட்டர் சுற்றில் தோற்ற அணியுடன் மோதும்.

குவாலிஃபயர் 2 சுற்றில் ஜெயிக்கும் அணி பைனலில் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள அணியுடன் மோதும். எலிமினேட்டர் சுற்றில் 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்த அணிகள் விளையாடும்.

பைனல் போட்டி ஜூலை 12ம் தேதி நடைபெறவுள்ளது.

ஐபிஎல் போட்டியை போலவே சனி, ஞாயிறு கிழமைகளில் 2 ஆட்டங்கள் நடக்கும்.

டிஎன்பிஎல் போட்டிக்கான ஸ்லோகன்

பரிசுத் தொகை எவ்வளவு?

இந்தப் போட்டியில் ஜெயித்து சாம்பியன் ஆகும் அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். ரன்னர்-அப் ஆகும் அணி ரூ.60 லட்சம் பெறும்.

குவாலிஃபயருக்கு முன்னேறி பின்னர் வெளியேறிய 2 அணிகளுக்கு தலா ரூ.40 லட்சம் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

இதுவரை சாம்பியன்கள்

இது 7வது டிஎன்பிஎல் தொடர் ஆகும். இதற்கு முன்பு 4 முறை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு முறை லைகா கோவை கிங்ஸ் அணி வென்றுள்ளது. கடந்த ஆண்டு கோவையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கோப்பையை பகிர்ந்து கொண்டது. மழை காரணமாக இறுதி போட்டி முழுமையாக நடத்த முடியாத காரணத்தால் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்றிரவு தொடங்கும் முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் கோவை எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் கிரவுண்டில் நடைபெறவுள்ளது.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி