தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa Wc 2022: செர்பியாவை வீழ்த்தி கடைசி 16 ரவுண்டுக்கு முன்னேறிய ஸ்விட்சர்லாந்து

FIFA WC 2022: செர்பியாவை வீழ்த்தி கடைசி 16 ரவுண்டுக்கு முன்னேறிய ஸ்விட்சர்லாந்து

I Jayachandran HT Tamil

Dec 04, 2022, 07:53 AM IST

பிபா உலகக்கோப்பை 2022 குரூப் ஆட்டத்தில் கடைசியாக செர்பியாவை 3-2 என்ற கோல்கணக்கில் ஸ்விட்சர்லாந்து வீழ்த்தி கடைசி 16 நாக்அவுட் ரவுண்டுக்குத் தகுதி பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

இந்தத் தோல்வியினால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து செர்பியா வெளியேற்றப்பட்டது.

ஸ்விட்சர்லாந்து மற்றும் செர்பியா அணிகளுக்கான இந்தப் போட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. குரூப் ஜியில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான ஆட்டமாக இது அமைந்தது.

ஆட்டம் தொடங்கிய 20ஆவது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் ஷக்ரி முதல் கோலை அடித்து தனது அணியின் வெற்றிக்கணக்கைத் தொடங்கி வைத்தார்.

இதில் ஆக்ரோஷமான செர்பிய வீரர்கள் கடுமையாக விளையாடத் தொடங்கினர்.

அடுத்த சில நிமிடங்களில் செர்பிய வீரர் டுஸான் தாடிக் தந்த பாஸைப் பயன்படுத்தி அலெக்ஸாண்டர் மிட்ரோபில் 26ஆவது நிமிடத்தில் சிறப்பாக கோல் போட்டார்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய செர்பிய வீரர்கள் 35ஆவது நிமிடத்தில் துஸான் லஹோவிக் அடித்த கோலால் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றனர்.

அந்த மகிழ்ச்சி 10 நிமமிடங்கள்கூட செர்பிய வீரர்களுக்கு நீடிக்கவில்லை. 44ஆவது நிமிடத்தில் ஸ்விஸ் வீரர் சில்மன் விட்மர் அனுப்பிய பாஸை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி எம்போலா அணியின் இரண்டாவது கோலை அடித்தார். இதன்மூலம் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டு சமநிலைக்கு வந்தனர்.

இரண்டாம் பகுதி ஆட்டத்தின் தொடக்கத்தில் 48ஆவது நிமிடத்தில் ஸ்விஸ் வீரர் பாவ்லோவிக் அற்புதமாக அனுப்பிய பாஸை சிறப்பாகப் பயன்படுத்தி பிரியுலர் கோல் அடித்தார். இதுவே அணியின் வெற்றி கோலாகவும் ஆகியது.

ஆட்ட இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை ஸ்விட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் கடைசி 16 ரவுண்டுக்கு ஸ்விட்சர்லாந்து முன்னேறியுள்ளது. இதே பிரிவில் பிரேசிலை 1-0 என்ற கோல்கணக்கில் கேமரூன் வென்று கடைசி 16 ரவுண்டுக்கு தகுதி பெற்றது.

டாபிக்ஸ்