Suresh Raina: ஐபிஎல் இல்லாவிட்டால் என்ன, கைகொடுக்கும் LPL - சின்ன தல ரெய்னாவின் மறு அவதாரம்
Jun 14, 2023, 03:16 PM IST
மிஸ்டர் ஐபிஎல் என்ற அழைக்கப்பட்டு ஐபிஎல் கதாநாயகனாக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் சின்ன தல என கொண்டாடப்பட்ட இவர், அணியின் அடுத்த கேப்டன் லிஸ்டிலும் இருந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அணியலிருந்து கழட்டிவிடப்பட்டு ஏலத்தில் எந்த அணியும் எடுக்காத நிலைமைக்கு சென்றார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போல் இலங்கையில் நடைபெறும் டி20 லீக் தொடராக எல்பிஎல் எனப்படும் லங்கா பிரீமியர் லீக் தொடர் உள்ளது. நான்காவது எல்பிஎல் தொடர் ஜூலை 4ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் விளையாடுவதற்கு தற்போது கிரிக்கெட் ஆடி வரும் இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பிசிசிஐ அனுமதியுடன் இந்த தொடரில் பங்கேற்கலாம்.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரின் ஹீரோவாகவும் ஜொலித்த சுரேஷ் ரெய்னா, எல்பிஎல் தொடரின் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008 முதல் விளையாடி வந்தார் ரெய்னா. சிஎஸ்கே அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட போது குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடிய இவர், பின்னர் சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைந்து விளையாடினார்.
மிஸ்டர் ஐபிஎல் என்றும், சின்ன தல என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்ட ரெய்னா, சிஎஸ்கே அணியின் தோனிக்கு அடுத்த நிலையில் இருந்தார். 2020 சீசனின்போது அவருக்கும், அணி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த சீசனில் இருந்து விலகினார்.
2022 மெகா ஏலத்தையொட்டி சிஎஸ்கே அணியிலிருந்து ரெய்னா விடுவிக்கப்பட்டார். அந்த சீசனில் நடைபெற்ற ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.
இதனால் வர்ணனையாளராக மாறி ஐபிஎல் 2022, 2023 சீசன்களில் செயல்பட்டார். இதற்கிடையே அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்த ரெய்னா, Road Safety உலக சீரிஸ் டி20 தொடரில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணிக்காக விளையாடினார்.
இதைத்தொடர்ந்து தற்போது லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். எல்பிஎல் தொடரில் 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான ஏலம் இன்று நடைபெறும் நிலையில் சுரேஷ் ரெய்னா வாங்கப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ம
தற்போது 36 வயதாகும் ரெய்னா, ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு செல்லவுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்