தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Squash World Cup 2023: தோல்வி அடையாத இந்தியாவை நாக்அவுட் செய்த மலேசியா! இறுதிப்போட்டியில் எகிப்துடன் மோதல்

Squash World cup 2023: தோல்வி அடையாத இந்தியாவை நாக்அவுட் செய்த மலேசியா! இறுதிப்போட்டியில் எகிப்துடன் மோதல்

Jun 17, 2023, 02:01 PM IST

google News
லீக் சுற்றில் ஒரு தோல்வி கூட பெறாமல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியை அரையிறுதி போட்டியில் ஒரு வெற்றி கூட பெறவிடாமல் நாக் அவுட் செய்தது மலேசியா அணி.
லீக் சுற்றில் ஒரு தோல்வி கூட பெறாமல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியை அரையிறுதி போட்டியில் ஒரு வெற்றி கூட பெறவிடாமல் நாக் அவுட் செய்தது மலேசியா அணி.

லீக் சுற்றில் ஒரு தோல்வி கூட பெறாமல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியை அரையிறுதி போட்டியில் ஒரு வெற்றி கூட பெறவிடாமல் நாக் அவுட் செய்தது மலேசியா அணி.

நான்காவது ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா குரூப் பி பிரிவில் இடம்பிடித்த இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் ஹாங்காங் அணியை 4-0 என்ற கணக்கிலும், இரண்டாவது போட்டியில் தென்ஆப்பரிக்கா அணியை 4-0 என்றும் வீழ்த்தியது. இதனால் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் ஜப்பான் அணியை 3-1 என வீழ்த்தியது.

லீக் சுற்றில் தோல்வி அடையாத அணியாக முழு ஆதிக்கம் செலுத்திய இந்தியா அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொண்டது. இதைத்தொடர்ந்து பலம் வாய்ந்த மலேசியா அணிக்கு எதிராக ஒரு வெற்றி கூட பெற முடியாமல் 0-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.

முதல் போட்டியில் மலேசியா வீரர் சாய் ஹங் ஓங் என்பவரிடம் போராடி தோல்வியுற்றார் இந்திய வீரர் அபேய் சிங். 37 நிமிடம் இந்த போட்டி நீடித்த நிலையில் மலேசியா வீரர் வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, 7-3, 7-3, 5-7, 7-4 என்ற புள்ளி கணக்கில் 18 வயதாகும் இளம் மலேசியா வீராங்கனை ஐரா அஸ்மானிடம் வீழ்ந்தார். இதனால் மலேசியா 2-0 என முன்னிலை பெற்றது.

இனி வரும் போட்டிகளில் தலா இரண்டு வெற்றிகளை பெற்றாக வேண்டிய நிலையில், புள்ளிப்பட்டியலில் உலக அளவில் 19வது இடத்தை பிடித்து இருக்கும் செளரவ் கோஷல், 7-5, 2-7, 7-6, 6-5 என்ற கணக்கில் புள்ளிப்பட்டியலில் 134வது இடத்தை பிடித்திருக்கும் டேரன் பிரகாஷம் என்பவரிடம் தோல்வியை தழுவினார்.

மூன்று வெற்றிகளை பெற்ற மலேசியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் எகிப்து அணி ஜப்பான் அணியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

இதையடுத்து நடப்பு சாம்பியனான எகிப்து அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது மலேசியா அணி. இந்த போட்டியானது இன்று நடைபெறுகிறது.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகளை WORLDSQUASH.TV என்ற தளத்தில் இலவசமாக பார்க்கலாம். ஜியோ சினிமாவிலும் இந்தப் போட்டி ஸ்டீரிம் ஆகிறது.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி