தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Steffi Graf: டென்னிஸில் கோல்டன்ஸ்லாம் வென்ற முதல் வீராங்கனைக்கு இன்று பிறந்த நாள்!

HBD Steffi Graf: டென்னிஸில் கோல்டன்ஸ்லாம் வென்ற முதல் வீராங்கனைக்கு இன்று பிறந்த நாள்!

Manigandan K T HT Tamil

Jun 14, 2023, 03:35 PM IST

google News
Tennis: ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியிலும் குறைந்தது நான்கு முறையாவது வென்ற ஒரே டென்னிஸ் வீராங்கனையும் இவரே.
Tennis: ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியிலும் குறைந்தது நான்கு முறையாவது வென்ற ஒரே டென்னிஸ் வீராங்கனையும் இவரே.

Tennis: ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியிலும் குறைந்தது நான்கு முறையாவது வென்ற ஒரே டென்னிஸ் வீராங்கனையும் இவரே.

ஸ்டெஃபி கிராஃப் ஜெர்மனியைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆவார். 1969ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி மேற்கு ஜெர்மனியில் பிறந்தார். அவருக்கு இன்று பிறந்த நாள்.

அனைத்து காலத்திலும் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக திகழும் இவர், 377 வாரங்கள் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்தார். மற்றும் 22 முக்கிய டென்னிஸ் ஆட்டங்களில் பட்டங்களை வென்றார். 1968 ஆம் ஆண்டில் ஓபன் எரா தொடங்கியதிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த வீராங்கனையாக இருக்கிறார் ஸ்டெஃபி கிராஃப்.

1988 ஆம் ஆண்டில், ஸ்டெஃபி கிராஃப் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஒரே காலண்டர் ஆண்டில் வென்று கோல்டன் ஸ்லாம் வென்ற முதல் டென்னிஸ் வீராங்கனை ஆனதுடன், அதே ஆண்டில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும் வென்றார் ஸ்டெஃபி கிராஃப்.

மேலும், ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியிலும் குறைந்தது நான்கு முறையாவது வென்ற ஒரே டென்னிஸ் வீராங்கனையும் இவரே.

ஒட்டுமொத்தமாக அவர், 107 டென்னிஸ் பட்டங்களை ஒற்றையர் பிரிவில் வென்றுள்ளார்.

ஸ்டெஃபி மற்றும் ஆஸி., முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட் ஆகிய இருவரும் மட்டுமே ஒரு காலண்டர் ஆண்டில் ஐந்து முறை (1988, 1989, 1993, 1995 மற்றும் 1996) மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனைகள் ஆவர். ஆடவர் பிரிவில் கூட யாரும் இந்தச் சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை.

ஸ்டெஃபி கிராஃபின் தடகள திறன் மற்றும் பேஸ்லைனில் இருந்து விளையாடிய ஆக்ரோஷமான கேம், இன்றைய விளையாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. நவீன விளையாட்டு பாணியை உருவாக்கிய பெருமைக்குரியவை ஸ்டெஃபி கிராஃபின் ஆட்டம்.

கடினமான களிமண் தரையில் விளையாடப்படும் பிரெஞ்சு ஓபனில் 6 முறையும், விம்பிள்டன் ஓபனில் 7 முறையும், ஆஸ்திரேலியன் ஓபனில் 4 முறையும், யு.எஸ். ஓபனில் 5 முறையும் வெற்றி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் ஸ்டெஃபி கிராஃப்.

1999-ம் ஆண்டு தனது 30-வது வயதில் ஓய்வு பெற்றார் ஸ்டெஃபி கிராஃப். அப்போது உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்தார்.

அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆன்ட்ரே அகாசியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி