தமிழ் செய்திகள்  /  Sports  /  Sand Sculpture By Sudarsan Patnaik For Diego Maradona On His Death Anniversary

Diego Maradona :மாரடோனா நினைவு தினம் - மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்

Divya Sekar HT Tamil

Nov 25, 2022, 06:50 AM IST

மாரடோனா நினைவு தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாரடோனா நினைவு தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மாரடோனா நினைவு தினத்தை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர் கால்பந்து வீரர் டீகோ மாரடோனா. உலகம் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். கால்பந்து உலகில் தனிக்கென தனி சாம்ராஜ்யம் கட்டி ஆண்ட மாரடோனா கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

ஆல்டைம் பெஸ்ட் கால்பந்து வீரரான டீகோ மாரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பை வென்றது. 1982, 1986, 1990, 1994 ஆகிய 4 கால்பந்து உலக கோப்பையில் விளையாடினார். 2008 முதல் 2010 வரை அர்ஜென்டினா அணி பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.

மாரடோனாவின் திடீர் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே, கால்பந்து வீரர் மாரடோனாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மாரடோனாவை நினைவு கூரும் வகையில் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

மாரடோனா மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்

ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் டீகோ மாரடோனா உருவத்தை மணல் சிற்பமாக வடிவமைத்து அதில் மாரடோனாவுக்கு அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்