Ba11sy Trichy: 3 விக்கெட்டுகளை காலி செய்த சேலம் பவுலர்-திருச்சி தடுமாற்றம்
Jun 18, 2023, 05:02 PM IST
TNPL: மற்றொரு தொடக்க வீரரான ஜாஃபர் ஜமால் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார்.
ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் அடுத்த மைதானமான திண்டுக்கல்லில் இன்று தொடங்கியது.
சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஓபனிங் பேட்ஸ்மேனாக கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜு களமிறங்கினார். ஆனால், அவர் 6 ரன்னில் நடையைக் கட்டினார்.
மற்றொரு தொடக்க வீரரான ஜாஃபர் ஜமால் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார்.
பின்னர் வந்த பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழக்க திருச்சி அணி தள்ளாடியது.
பின்னர் வந்த விக்கெட் கீப்பர் மணி பாரதி 40 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.
ஆண்டனி தாஸ் 12 ரன்களில் ஆட்டமிழக்க, மணி பாரதி, கணேஷ் மூர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சேலம் தரப்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டுகளையும், சன்னி சாந்து, சச்சின் சும்ரா, கணேஷ் மூர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ரவி கார்த்திகேயன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இவ்வாறாக திருச்சி அணி 20 ஓவர்களில் 140 ரன்களை எடுத்தது.
சொந்த மாவட்டமான சேலம் அணிக்கு எதிராக யார்க்கர் மன்னன் நடராஜன் களமிறங்க இருப்பதால் அவரது ஆட்டம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
முதல் ஆறு போட்டிகள் கோவையில் நடைபெற்ற நிலையில், இந்த வாரத்தில் வரும் வியாழக்கிழமை வரை மொத்தம் 7 போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
சேலம் ஸ்பார்ட்ன்ஸ், பால்சி திருச்சி இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் விளையாடியுள்ள நிலையில், இரண்டு அணிகளும் தோல்வியை தழுவியுள்ளன. திருச்சி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது. அதேபோல் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக 52 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி தோல்வியை தழுவியது. தற்போது புள்ளிப்பட்டியலில் திருச்சி அணி 5வது இடத்திலும், சேலம் அணி 6வது இடத்திலும் உள்ளன.
டாபிக்ஸ்