தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wrestlers Protest: 'போராட்டத்தை கைவிடவில்லை'- சாக்‌ஷி மாலிக் விளக்கம்

Wrestlers Protest: 'போராட்டத்தை கைவிடவில்லை'- சாக்‌ஷி மாலிக் விளக்கம்

Karthikeyan S HT Tamil

Jun 05, 2023, 05:34 PM IST

google News
Sakshi Malik: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் இருந்து சாக்‌ஷி மாலிக் விலகுவதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Sakshi Malik: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் இருந்து சாக்‌ஷி மாலிக் விலகுவதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Sakshi Malik: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் இருந்து சாக்‌ஷி மாலிக் விலகுவதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தில் இருந்து முன்னணி வீராங்கனையான சாக்‌ஷி மாலிக் விலகியதாக வெளியான தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உட்பட மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராடி வருகின்றனர். 

தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கில் பேரணி செல்ல அவர்கள் முயன்றபோது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கங்கையில் தங்கள் பதக்கங்களை வீச உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய அரசுக்கும் கெடு விதித்தனர்.

இதனிடையே கடந்த சனிக்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் சந்தித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பின் போது பிரிஜ் பூஷன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்தச் சூழலில்தான் போராட்டத்தில் இருந்து சாக்‌ஷி மாலிக் விலகியதாக இன்று தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை அவர் மறுத்துள்ளார். 

போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. தவறான தகவலை பரப்ப வேண்டாம். நீதிக்கான போராட்டத்தில் இருந்து நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம். அறவழியில் நாங்கள் மேற்கொண்டு வரும் சத்தியாகிரகத்துடன், ரயில்வே துறையில் எனது பணிக்கான பொறுப்பைச் செய்து வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்." என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு முன்னணி வீரரான பஜ்ரங் புனியா கூறுகையில், "போராட்டம் வாபஸ் பெறப்படும் என பரவும் தகவலில் உண்மையில்லை, அது வதந்தி தான். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். பெண் மல்யுத்த வீரர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ததாக வெளியான தகவலும் தவறானது." என்று விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி