Rishabh Pant: இன்ஸ்டாவில் மாஸ் விடியோ பகிர்ந்த பண்ட் - பயர், ஹார்ட் எமோஜி பறக்க விடும் ரசிகர்கள்!
Jun 15, 2023, 11:36 AM IST
கார் விபத்துக்கு பின்னர் நன்கு உடல்நிலை தேறி வரும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், யார் உதவி இல்லாமல் படிக்கட்டுகளில் ஏறும் விடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் அவரது மன தைரியத்தை பாராட்டியும், ஊக்குவிக்கும் விதமாகவும் கருத்துகளை பகிர்ந்துவருகிறார்கள்.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ளார் ரிஷப் பண்ட். இவர் ஊன்றுகோல் உதவி இல்லாமல் மாடிப்படி ஏறும் விடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். " அவ்வளவு மோசமில்லை ரிஷப். சிறிய விஷயங்கள் கூட சில சமயங்களில் கடினமாக இருக்கும்" என தனக்கு தானே ஊக்கப்படுத்தி கொள்ளும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறிய விடியோவில் முதல் சில விநாடிகள் படி ஏறுவதற்கு சிரமம்படுகிறார் பண்ட். அதில் கைப்பிடியை பிடித்தவார் மெதுவாக ஏறுகிறார். பின்னர் பிற்பகுதியில் எந்த ஆதரவும் இல்லாமல், யார் உதவியும் இல்லாமல் தைரியமாக ரிலாக்ஸாக சிரமம் அடையாமல் படி ஏறுகிறார்.
பண்ட் பகிர்ந்த இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலரும் பயர் விட்டு வருவதுடன், அவரை ஊக்கப்படுத்தும் விதமாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதுதவிர தனது இன்ஸ்டா ஸ்டோரயில் பலத்த காயமடைந்திருக்கும் வலது காலில் அசைவு மேற்கொள்ளும் பயிற்சியும் பகிரந்துள்ளார்.
இந்த விடியோவுக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், ஆஸ்திரேலியா முன்னாள் மாத்யூ ஹெய்டன், ரிஷப் பண்ட் சகோதரி சாக்ஷி பண்ட் உள்ளிட்ட பலரும் அவரை ஊக்குவிக்கும் விதமாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலை 5.30 அளவில் ரிஷப் பண்ட் ஒட்டி சென்ற மெர்சிடிஸ் சொகுசு காரில் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. டேராடூன் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் கார் தீபற்றி கொண்ட நிலையில், பலத்த காயங்களுடன் பண்ட் மீட்கப்பட்டார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பண்ட்க்கு வலது முழங்கால் தசை நார் கிழந்தும், தலையில் இரண்டு வெட்டுகளும், வலது கை மணிக்கட்டு, கணுக்கால், கால் விரல், முதுகு பகுதியில் சிராய்ப்பு காயங்கள் இருப்பது தெரியவந்த நிலையில் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜனவரி 4ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்ட பண்ட்க்கு, அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஒரு மாத காலம் சிகிச்சையில் இருந்து வந்த பண்ட் பின்னர் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக இன்ஸ்டாவில் அப்டேட் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் போட்டியை நேரில் வந்த பார்த்ததுடன், ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்துவாறு உடல்நலம் தேறி வருகிறார். பண்ட் முழு உடற்தகுதி பெற 2024 வரை ஆண்டு வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் பெரிய கிரிக்கெட் தொடரான ஆசிய கோப்பை, உலகக் கோப்பை தொடரை மிஸ் செய்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்