தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Paris Olympics: ஒலிம்பிக் பாதுகாப்பு தலைவர் திடீர் ராஜிநாமா

Paris Olympics: ஒலிம்பிக் பாதுகாப்பு தலைவர் திடீர் ராஜிநாமா

Manigandan K T HT Tamil

Jun 11, 2023, 04:58 PM IST

google News
Olympics: 53 வயதான காரி, 2021 டிசம்பரில் லண்டன் பயணத்தின் போது முறையற்ற கருத்துகளை தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் புகாருக்கு ஆளானார்.
Olympics: 53 வயதான காரி, 2021 டிசம்பரில் லண்டன் பயணத்தின் போது முறையற்ற கருத்துகளை தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் புகாருக்கு ஆளானார்.

Olympics: 53 வயதான காரி, 2021 டிசம்பரில் லண்டன் பயணத்தின் போது முறையற்ற கருத்துகளை தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் புகாருக்கு ஆளானார்.

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட பாரீஸ் ஒலிம்பிக் பாதுகாப்பு தலைவர் ராஜிநாமா செய்தார்.

இதுதொடர்பாக ஒலிம்பிக் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

53 வயதான காரி, 2021 டிசம்பரில் லண்டன் பயணத்தின் போது முறையற்ற கருத்துகளை தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் புகாருக்கு ஆளானார்.

மார்ச் 21ம் தேதி அவரை பணியிடைநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், அவர் ராஜிநாமா செய்தார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையை மேற்கொண்ட ஆய்வுக் குழு இந்த வழக்கை "முழு சுதந்திரத்துடனும், அதன் முடிவுகளின் போது வசம் இருந்த கூறுகள் தொடர்பாகவும்" பிரெஞ்சு நீதி அமைப்புக்கு தெரிவிக்க எந்த காரணமும் இல்லை என்று தீர்ப்பளித்தது.

ஜூன் 2021 இல் அரசாங்க பதவிக்கு நியமிக்கப்பட்ட காரிக்கு எதிராக வேறு சில குற்றச்சாட்டுகள் இருந்தன.

இந்தப் பதவியை ஏற்பதற்கு முன்பு பிரான்சில் நடைபெற்ற யூரோ-2016 கால்பந்து போட்டியின் காரி பாதுகாப்பை நிர்வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது பொறுப்புக்கு அடுத்த யார் நியமிக்கப்படப் போகிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக, பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவர் பிரிஜிட் ஹென்ரிக்ஸ், மே 25 அன்று திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அடுத்த ஆண்டு பாரிஸில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்புகளுக்கு மத்தியில் இவரது ராஜிநாமா எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. பிரான்ஸ் விளையாட்டுத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரிஜிட் ஹென்ரிக்ஸ், பிரான்ஸ் மகளிர் கால்பந்து அணியை ஒலிம்பிக்கில் முதல் முறையாக வழிநடத்திச் சென்றவர் ஆவார்.

அடுத்த ஆண்டு பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அவரது திடீர் ராஜிநாமா முடிவு அந்நாட்டு விளையாட்டுத் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், ஒலிம்பிக் பாதுகாப்பு தலைவர் ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் விளையாட்டு அமைச்சர் எமிலி கேஸ்டெரா கூறுகையில், "இன்று யாரும் வின்னர் கிடையாது" என்றார்.

மேலும், பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டி குழுவினர் ஒரே குறிக்கோளுடன் ஒன்றிணைந்து செயல்படுமாறு வலியுறுத்தினார்.

பிரிஜிட் ஹென்ரிக்ஸின் ராஜிநாமா குறித்து பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், “இன்று ஒலிம்பிக் கமிட்டியின் பொதுக் குழு கூட்டம் நடந்தது. அதன் தொடக்கத்திலேயே ஹென்ரிக்ஸ் பதவி விலகுவதாக அறிவித்துவிட்டார். தற்காலிகமாக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக அதன் பொதுச் செயலர் அஸ்டிரிட் குயார்ட் வழிநடத்துவார். அடுத்த தலைவரை சதேர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை அடுத்த மூன்று மாதத்திற்கு அவரே செய்து முடிப்பார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி