தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sunil Gavaskar: அஸ்வின் இல்லாமல் எங்கு கோட்டைவிட்டது இந்தியா..!அவர் மட்டும் இருந்திருந்தால் - கவாஸ்கர் ஆதங்கம்

Sunil Gavaskar: அஸ்வின் இல்லாமல் எங்கு கோட்டைவிட்டது இந்தியா..!அவர் மட்டும் இருந்திருந்தால் - கவாஸ்கர் ஆதங்கம்

Jun 13, 2023, 12:44 PM IST

google News
நவீன கிரிக்கெட்டில் அஸ்வினை போல் மோசமாக நடத்தப்பட்ட வீரர் யாரும் இல்லை என தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர். இதுதொடர்பாக பிரபல கிரிக்கெட் தளத்துக்கு விரிவான கட்டுரையும் அவர் எழுதியுள்ளார்.
நவீன கிரிக்கெட்டில் அஸ்வினை போல் மோசமாக நடத்தப்பட்ட வீரர் யாரும் இல்லை என தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர். இதுதொடர்பாக பிரபல கிரிக்கெட் தளத்துக்கு விரிவான கட்டுரையும் அவர் எழுதியுள்ளார்.

நவீன கிரிக்கெட்டில் அஸ்வினை போல் மோசமாக நடத்தப்பட்ட வீரர் யாரும் இல்லை என தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர். இதுதொடர்பாக பிரபல கிரிக்கெட் தளத்துக்கு விரிவான கட்டுரையும் அவர் எழுதியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிகப் பெரிய தோல்வி அடைந்து இருநாள்கள் ஆகியும், அதுதொடர்பான விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. 

இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்திருக்கலாம், மைதானத்தில் நிலவிய சூழ்நிலையை ரோஹித் - டிராவிட் ஆகியோர் தவறாக கணித்துவிட்டார்கள், கேஎஸ் பரத்துக்கு பதிலாக இஷான் கிஷனை சேர்த்திருக்கலாம் போன்ற பேச்சுகளும், விவாதங்களும் நிலவி வருகின்றன. 

இதையெல்லாம் விட மிக முக்கியமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 பவுலரான அஸ்வினை அணியில் சேர்க்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர்கள் மட்டுமல்ல, பிற அணிகளின் வீரர்களும் கூட கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்களையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 470 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அஸ்வின், உலகின் தலைசிறந்த ஸ்பின்னராகவும், நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பவுலராகவும் இருந்து வரும் அஸ்வின், இடது கை பேட்ஸ்மேன்களின் தூக்கத்தை கெடுத்த வீரராகவும் இருந்துள்ளார். அந்த வகையில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டார். ரவிந்திர ஜடேஜாவை காட்டிலும் அஸ்வின் சரியான தேர்வாக இருந்திருக்ககூடும் என சச்சின் டென்டுல்கரே ஒப்புக்கொண்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பிய இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், அணி நிர்வாகத்தின் முடிவை கடுமையாக விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கவாஸ்கர்.

ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த பவுலரை இந்திய அணி கழட்டிவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணியில் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். அதில் ஒருவரான ஹெட் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டு சதமடித்தார். அதேபோல் மற்றொரு இடதுகை பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி 48, 66 ரன்கள் என இரண்டு இன்னிங்ஸிலும் அணிக்கு தேவையான முக்கியமான பங்களிப்பை அளித்தார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் இடது கை பேட்ஸ்மேன்களான அலெக்ஸ் கேரி - மிட்செல் ஸ்டார்க் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்த சூழ்நிலையில் அஸ்வின் மட்டும் அணியில் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது. அவரால் பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை தர முடியும். 

அஸ்வினை போல் வெறு எந்த கிரிக்கெட்டரும் நவீன கிரிக்கெட்டில் இவ்வளவு மோசமாக நடத்தப்பட்டது இல்லை. ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த பேட்ஸ்மேன் ஸ்பினுக்கு சாதமான ஆடுகளத்தில் அல்லது புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் விளையாட முடியாது என காரணம் கூறி அவரை அணியில் சேர்க்காமல் இருந்திருப்பார்களா?

இங்கிலாந்தில் அஸ்வின் சேர்க்கப்படாமல் இருப்பது இது ஆறாவது முறையாக நிகழ்ந்துள்ளது. 2021இல் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து போட்டிகளிலும் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதில் கடைசி டெஸ்ட் போட்டி அட்டவணை மாற்றப்பட்டது. அதிலும் அவர் விளையாடவில்லை. இங்கிலாந்தில் அஸ்வினின் சாதனை மிகவும் மோசமாக இல்லை. அங்கு 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அஸ்வின் இரண்டு இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கான நம்பிக்கையை கொஞ்சம் ஏற்படுத்தினார். இவ்வளவு சிறப்புகளை அஸ்வின் பெற்றிருந்தபோதிலும், நான்கு மற்றும் ஐந்தாவது நாளில் ஸ்பின்னுக்கு ஆதரவாக இருக்கும் பிட்சில் அவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருப்பதை புரிந்துகொள்வதற்கு கடினமாக உள்ளது. ஒரு வேலை இந்த போட்டியில் இந்தியா ஜெயித்திருந்தாலும் அஸ்வின் சேர்க்கபடாததை நியாயப்படுத்த முடியாது. ஏனென்றால் இந்தியா அணி 444 ரன்கள் சேஸ் செய்ய  வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் இருந்தே அவரை தேர்வு செய்யாதது சரியான முடிவு இல்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.

இவ்வாறு கவாஸ்கர் பிரபல கிரிக்கெட் தளத்துக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் ஒரே ஸ்பின்னராக இடம்பிடித்த ரவிந்திர ஜடேஜா, பேட்டிங்கில் 48 ரன்களும், பவுலிங்கில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி