தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Gautham Gambhir: கிரிக்கெட் களத்தில் சண்டைகள்..! தோனி, கோலியுடனான உறவு - மனம் திறந்த கம்பீர்

Gautham Gambhir: கிரிக்கெட் களத்தில் சண்டைகள்..! தோனி, கோலியுடனான உறவு - மனம் திறந்த கம்பீர்

Jun 14, 2023, 10:43 AM IST

google News
இரண்டு நபர்களுக்கு இடையிலான ஒரு விஷயத்தை பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை எனவும், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருடன் தனது உறவு குறித்து கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இரண்டு நபர்களுக்கு இடையிலான ஒரு விஷயத்தை பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை எனவும், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருடன் தனது உறவு குறித்து கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.

இரண்டு நபர்களுக்கு இடையிலான ஒரு விஷயத்தை பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை எனவும், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருடன் தனது உறவு குறித்து கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஒரே அணி வீரராக இருந்தபோதிலும் களத்தில் விராட் கோலிக்கு எதிராக ஆக்ரோஷத்தையும், களத்தின் வெளியே தோனி பற்றியும் வெளிப்படையாக விமர்சித்தவர் இந்திய அணியின் முன்னாள் ஓபனரான கவுதம் கம்பீர். குறிப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் லக்னோவுக்கு எதிரான டி20 போட்டியில் கம்பீர் - கோலி நிகழ்த்திய வார்த்தை பரிமாற்றங்கள் பரபரப்பை கிளப்பின.

ஏற்கனவே கம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தபோது, 2013 சீசனில் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு களத்தில் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான நிகழ்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

அதேபோல் தோனி குறித்தும், அவரது ஆட்டத்திறன் குறித்தும் கம்பீர் தொடர்ச்சியாக விமர்சனத்தை முன் வைத்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களுடனான தனது உறவு குறித்து கம்பீர் மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து கம்பீர் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: " தோனி, கோலி ஆகியோருடன் எனது உறவு நன்றாகவே உள்ளது. எங்களுக்குள் எந்த வாக்குவாதம் ஏற்பட்டாலும் அது களத்தில் உள்ளே மட்டுமே இருக்கும். களத்துக்கு வெளியே எதுவும் ஏற்பட்டதில்லை. தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் வெற்றிக்காக போராடுவது போல் நானும் அதை செய்வேன்.

கிரிக்கெட் களத்தில் பல்வேறு சண்டைகளை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் அவை களத்தில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்வேன். இதுபற்றி பலரும் பலவிதமாக பேசியுள்ளனர். 

இந்த விவகாரத்தில் பலரும் டிஆர்பிக்காக என்னிடம் பேட்டி கொடுக்குமாறும், இந்த சண்டைகள் குறித்து விளக்கம் கூறியுள்ளனர். இருவருக்குள் நிகழ்ந்த ஒரு விஷயத்தை பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை" என்று கூறினார்.

இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்து வந்த கம்பீர், 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்தார். அத்துடன் இந்த இரண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலும் டாப் ஸ்கோரர் இவர்தான்.

ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கிய கம்பீர், 2012, 2014 என இரு சீசன்களில் அணிக்கு கோப்பையை பெற்று தந்துள்ளார். தற்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி