தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sai Sudharsan: சாய் சுதர்ஷன் அரை சதம் விளாசல்-கோவை கிங்ஸ் 179 ரன்கள் குவிப்பு

Sai Sudharsan: சாய் சுதர்ஷன் அரை சதம் விளாசல்-கோவை கிங்ஸ் 179 ரன்கள் குவிப்பு

Manigandan K T HT Tamil

Jun 12, 2023, 09:07 PM IST

google News
Lyca Kovai Kings vs IDream Tiruppur Tamizhans: திருப்பூர் அணியில் இடம்பிடித்துள்ள விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை அள்ளினார். (@TNPremierLeague)
Lyca Kovai Kings vs IDream Tiruppur Tamizhans: திருப்பூர் அணியில் இடம்பிடித்துள்ள விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை அள்ளினார்.

Lyca Kovai Kings vs IDream Tiruppur Tamizhans: திருப்பூர் அணியில் இடம்பிடித்துள்ள விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை அள்ளினார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கோவை அணி 179 ரன்களை குவித்துள்ளது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் விளையாடவுள்ளது.

இதையடுத்து ஷாருக் கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதலில் விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக பி.சச்சின், ஜே.சுரேஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், இருவரும் பெரிதாக சோபிக்கவில்லை. சச்சின் 2 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் எல்பிடபிள்யூ ஆனார்.

முதல் விக்கெட்டை திருப்பூர் தமிழன்ஸ் பவுலர் புவனேஸ்வரன் வீழ்த்தினார். 11 ரன்கள் எடுத்திருந்போது எல்.பி.டபிள்யூ முறையில் சுரேஷ் குமார் விக்கெட்டை காலி செய்தார் புவனேஸ்வரன்.

இதன்மூலம், இந்த சீசன் டிஎன்பிஎல் போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்தார் புவனேஸ்வரன். பின்னர் வந்த சாய் சுதர்ஷன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மற்றொரு பக்கம், ராம் அரவிந்த் டக் அவுட்டாகிவிட, யு.முகேஷ் 33 ரன்களிலும், அதீக் அர் ரஹ்மான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

30 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கலக்கிய சாய் சுதர்ஷன் இந்தப் போட்டியில் அதிரடி காண்பித்தார்.

மற்றொரு பக்கம் கேப்டன் ஷாருக் கான் அவருக்கு தோள் கொடுத்தார். கேப்டன் ஷாருக் கான் விக்கெட்டை திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர் வீழ்த்தினார்.

திருப்பூர் தமிழன்ஸ் சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 4 ஓவர்கள் வீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புவனேஸ்வரன் 4 ஓவர்கள் வீசி 35 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இவ்வாறாக கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது.  சாய் சுதர்ஷன் 45 பந்துகளில் 86 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார். 120 பந்துகளில் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் விளையாடவுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும்.

2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.

இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்று முதல் 7வது சீசன் போட்டி தொடங்கியது.

 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி