தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Josh Hazlewood: Wtc ஃபைனல்- ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஆஸி., அணியில் இடம்பிடித்த பவுலர்

Josh Hazlewood: WTC ஃபைனல்- ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஆஸி., அணியில் இடம்பிடித்த பவுலர்

Manigandan K T HT Tamil

Jun 05, 2023, 10:42 AM IST

google News
WTC Final: வரும் 16ம் தேதி தொடங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஹேசில்வுட் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
WTC Final: வரும் 16ம் தேதி தொடங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஹேசில்வுட் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

WTC Final: வரும் 16ம் தேதி தொடங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஹேசில்வுட் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய அவர், விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வலியால் துடித்தார்.

இதையடுத்து, எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடாமல் தவிர்த்தார்.

7ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் ஆஸி., அணியில் அவர் இடம்பிடித்திருந்தார்.

பைனல் போட்டியில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். எனினும் அவரால் முழு உடல் தகுதியை எட்டமுடியவில்லை.

இதையடுத்து அவர் அணியிலிருந்து நேற்று விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நேசர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

வரும் 16ம் தேதி தொடங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஹேசில்வுட் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேசில்வுட் 59 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி, 222 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார்.

ஆர்சிபி அணிக்காக இந்த சீசனில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.

ஆஸ்திரேலிய அணியின் தலைமைத் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், "ஜோஷ் ஹேசில்வுட் ஏறக்குறைய முழு உடல் தகுதியை எட்டிவிட்டார். ஆனால், நாங்கள் தான் ஆஷஸ் தொடர் வருவதை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்தோம்" என்றார்.

யார் இந்த மைக்கேல் நேசர்

33 வயதாகும் மைக்கேல் நேசர், தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். வலது கை ஆட்டக்காரர் மற்றும் வலது கையில் பந்துவீசும் திறன் படைத்தவர்.

இதுவரை 2 டெஸ்ட்டுகளில் மட்டுமே ஆஸி., அணிக்காக விளையாடியிருக்கிறார். மொத்தம் 7 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார். பவுலிங்கில் இவரது பெஸ்ட் 3/22.

ஆஸ்திரேலியா அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித் (விசி) , மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி