தமிழ் செய்திகள்  /  Sports  /  Jofra Archer Sign Mi Cape Town Team At Sa20

Jofra Archer Sign MI Cape: மீண்டும் வரும் ஆர்ச்சர்… மீண்டு வர 2 ஆண்டுகள் ஆனது!

Nov 23, 2022, 10:41 PM IST

2021 ம் ஆண்டிற்கு பின் மீண்டும் கிரிக்கெட் போட்டியில (ECB)
2021 ம் ஆண்டிற்கு பின் மீண்டும் கிரிக்கெட் போட்டியில

2021 ம் ஆண்டிற்கு பின் மீண்டும் கிரிக்கெட் போட்டியில

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அதிவேக பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜோப்ரா ஆர்ச்சர். வலது கை பந்து வீச்சாளரான இவர், 1995 ஏப்ரல் 1 ம் தேதி பிறந்தவர். 28 வயதாகும் ஆர்ச்சரின் வருகை, இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பெரும்பலமாக இருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

ஆனாலும் ஆர்ச்சரின் விதி வேறு விதமாக இருந்தது. அடுத்தடுத்து காயங்களால் அவதிப்பட்ட ஆர்ச்சர், முக்கியபோட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்தார். இறுதியாக ஏற்பட்ட காயம் காரணமாக, ஜூலை 2021 முதல் விளையாடாமல் இருந்த ஆர்ச்சருக்கு தற்போது புதுவாழ்வு கிடைத்துள்ளது.

ஆம்… மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறார் ஆர்ச்சர். தென்ஆப்பிரிக்காவில் ஜனவரி 2023 ல் தொடங்கும், அந்நாட்டு டி20(நம்மூர் ஐபிஎல் மாதிரி) போட்டியில் பெரும்பாலான அணிகளை இந்தியாவில் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்களே கைப்பற்றியுள்ளனர்.

அந்த வகையில் மும்பை இந்தியன் அணி தான், அங்கு எம்.ஐ., கேப்டவுன் என்கிற பெயரில் அணியை நடத்துகிறது. அந்த அணியில், நேரடியாக வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறங்குகிறார் ஆர்ச்சர். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எம்.ஐ.கேப்டவுன் நிர்வாகம் வெளியிட்டதும், ஆர்ச்சரின் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தம்.

தற்போது அபுதாபியில் நடந்து வரும் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆர்ச்சர், அங்கு தனது திறமை காட்டி அசத்தி வருகிறார். இந்நிலையில் தான், அவருக்கு தனது அணியில் வாய்ப்பு வழங்கியிருக்கிறது மும்பை இண்டியன்ஸ் நிர்வாகம்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, தனது மகிழ்ச்சியை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்ச்சர்.

ஆர்ச்சரின் இந்த மகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அதற்கு கேப்ஷனாக ஹார்ட் வடிவத்தை பதிவிட்டுள்ளது.  

 

 

 

 

டாபிக்ஸ்