தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa Wc 2022:ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான்-2 அணிகளும் ரவுண்டு 16க்கு முன்னேறின

FIFA WC 2022:ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான்-2 அணிகளும் ரவுண்டு 16க்கு முன்னேறின

I Jayachandran HT Tamil

Dec 02, 2022, 08:02 AM IST

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை ஜப்பான் வீழ்த்தியது.
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை ஜப்பான் வீழ்த்தியது.

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை ஜப்பான் வீழ்த்தியது.

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் ஸ்பெயினை ஜப்பான் அதிரடியாக வீழ்த்தியது.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

குரூப் இ போட்டியில் இது கடைசி போட்டியாகும். ஜப்பானிடம் தோல்வியடைந்த போதும் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டதால் அடுத்த சுற்றுக்கு ஸ்பெயினும் முதல் இடத்தில் உள்ள ஜப்பானும் முன்னேறியுள்ளன.

இந்த குரூப்பில் இருந்த 4 முறை சாம்பியனான ஜெர்மனியும், கோஸ்டா ரிக்காவும் அடுத்த சுற்றுக்குச் செல்லும் தகுதியை இழந்தன.

பலம் வாய்ந்த ஜெர்மனியை தோற்கடித்து ஜப்பான் ரவுண்டு 16க்கு முன்னேறியது கால்பநது வரலாற்றில் அந்த நாடு செய்த சாதனயாகக் கருதப்படுகிறது.

ஸ்பெயினும் ஜெர்மனியும் தலா 4 புள்ளிகள் எடுத்து இருந்தபோதிலும் கோல் கணக்கின் அடிப்படையில் ஜெர்மனி வெளியேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே ஜப்பான்- ஸ்பெயின் இடையிலான போட்டியில் முதல் பகுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் அல்வாரோ மொராட்டோவின் சூப்பர் ஹெட்டர் மூலம் 1 கோல் போட்டு முன்னணிக்கு வந்தது. இரண்டாவது பகுதி ஆட்டத்தில் தொடக்கத்திலேயே ஜப்பான் ஒரு கோல் அடித்து சமன் செய்தது.

ஆட்ட இறுதியில் ஜப்பானின் ரிட்ஸு டோவன், ஆவோ டானகா தலா ஒரு கோல் போட்டு அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

கடைசிவரை போராடியும் ஜப்பானின் தடுப்பு வீரர்களை மீறி கோல் போட முடியவில்லை.

ஜப்பானின் இந்த சாதனையை அனைத்து வீரர்களும் ஸ்டேடியத்தின் மையத்தில் கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

டாபிக்ஸ்